இன்போசிஸ் பங்குகளை விற்கும் நாராயணமூர்த்தி, நந்தன் நிலகேனி..!
இன்போசிஸ் நிறுவனம் தனது முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்க, வர்த்தக சரிவில் இருக்கும் தற்போத நிலையில் பொது சந்தையில் இருக்கும் 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப பெற முடிவு செய்திருந்தது.

இந்நிலையில், 30 வருட இன்போசிஸ் வரலாற்றில் முதல் முறையாக பைபேக் செய்வதால், இந்நிறுவனத்தின் நிறுவனங்களும் தங்களிடம் இருக்கும் பங்குகளை விற்பனை செய்ய முன்வந்துள்ளனர்.

இதன் வாயிலாக இந்நிறுவனத்தின் நிறுவனர்களான நாராயணமூர்த்தி மற்றும் நந்தன் நிலகேனி ஆகியோர் 1.77 கோடி பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
இன்றைய சந்தை பதிப்பில் இதன் மதிப்பு 2,038.94 கோடி ரூபாய்.
இன்போசிஸ் நிறுவனர்கள் மட்டும் சுமார் 29.28 கோடி பங்குகள் வைத்துள்ளது, இது இந்நிறுவனத்தின் 12.75 சதவீத பங்குகள்.


Click it and Unblock the Notifications