ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு 5.7 சதவீதம் அளவிலேயே உயர்ந்துள்ளது. இது கடந்த 3 வருட நரேந்திர மோடியின் ஆட்சியில் பதிவான மிகவும் குறைவான அளவீடு என்பது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தி சந்தை
பணமதிப்பிழப்பு மூலம் ஏற்கனவே அதிகளவிலான பாதிப்பை சந்தித்த இந்தியா ஜிஎஸ்டி அமலாக்கத்தின் வாயிலாக மொத்த உற்பத்தி சந்தையும் பாதித்தது.
இதன் மூலம் உற்பத்தி துறையில் GVA அளவீடு 10.7 சதவீதத்தில் இருந்து 1.2 சதவீதமாக குறைந்துள்ளது.
ஜிடிபி
இந்நிலையில் 2017-18 நிதியாண்டில் ஜூன் காலாண்டில், அதன் முந்தைய காலாண்டில் பெற்ற 6.1 சதவீதத்தை விடவும் குறைவான அளவான 5.7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதேகாலக்கட்டத்தில் கடந்த நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 7.9 சதவீதமாக இருந்தது.
சீனா
பொருளாதார சந்தையில் இந்தியா சீனாவுடன் போட்டி போடும் நிலையில் கடந்த இரு காலாண்டுகளாக சீனா 6.9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.
குறைவான வளர்ச்சி
இந்தியா 2014ஆம் ஆண்டு ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியா 4.6 சதவீத வளர்ச்சி மட்டுமே பெற்றிருந்தது. இதுவே மிகவும் குறைவான வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications