நாட்டின் முன்னணி மென்பொருள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், தனது புதிய செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கு Ignio என்ற பெயரை வைத்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இதனை டிசிஎஸ் பிராண்டு பெயர் இல்லாமல் முழுமையான தனி ஒரு பிராடெக்ட் ஆக வைத்து வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் வெற்றி இதனுடையாதாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் டிசிஎஸ் நிர்வாகம் கண்டிப்பாக உள்ளது.
டிஜிடேட்
Ignio என்ற பிராடெக்ட் டிசிஎஸ் நிறுவனத்தின் கீழ் இல்லாமல் டிஜிடேட் என்ற நிறுவனத்தின் கீழ் உள்ளது. மேலும் டிஜிடேட் நிறுவன இணையத்தளத்தில் கூட டிசிஎஸ் வென்சர் என்று ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
அந்த அளவில் இதன் மீது நம்பிக்கை வைத்து தனியொரு பிராடெக்ட் ஆகச் சந்தைக்கு வருகிறது Ignio.
அமெரிக்க நிறுவனம்
இந்தத் தனிப்பட்ட மென்பொருளை விற்பனைப்படுத்தவும், சந்தைப்படுத்தவும் டிசிஎஸ் கீழ் இயங்கும் டிஜிடேட் நிறுவனம் அமெரிக்க நிறுவனத்தை நியமித்துள்ளது.
ஹோரிக் வின்
Ignio விற்கப்பட வேண்டும் என்றால் இது தனியொரு பிராண்டாக உருவாக வேண்டும். சேவைத்துறையில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தும் டிசிஎஸ் நிழலில் இருந்து சற்று ஒதுங்க வேண்டும். மேலும் இந்த மென்பொருள் சந்தையில் தனியாக நின்று வெற்றி அடையும் என்பதையும் நம்புகிறோம் என்று டிஜிடேட் நிறுவனத்தின் தலைவர் ஹோரிக் வின் தெரிவித்துள்ளார்.
10 ஊழியர்கள்
தற்போது Ignio விற்பனை அணியில் 10 சேல்ஸ் எக்ஸ்கியூடிவ் உள்ளனர். இதனைச் சரியான திட்டமிடலுடன் அமெரிக்கச் சந்தையில் துவங்கி உலகம் முழுவதிலும் அறிமுகம் செய்ய இந்தக் குழு பணியாற்றி வருகிறது.
டிசிஎஸ்
சேவை துறையில் மட்டுமே இருந்த இந்திய ஐடி நிறுவனங்கள் தற்போது புதிய தொழில்நுட்பத்திலும் பிராடெக்ட்களை உருவாக்குவிதிலும் கவனம் செலுத்த துவங்கியுள்ளது.
இதன் முன்னோடியாக டிசிஎஸ், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் தற்போது களமிறங்கியுள்ளது. தற்போது டிசிஎஸ் செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன் மற்றும் காக்னிடிவ் கம்பியூடிங் ஆகியவற்றைக் கையில் எடுத்துள்ளது.
இன்போசிஸ்
டிசிஎஸ் நிறுவனத்திற்கு முன்னதாக விஷால் சிக்கா தலைமையிலான இன்போசிஸ் தனது செயற்கை நுண்ணறிவு தளத்தை உருவாக்கி அறிமுகம் செய்திருந்தது.
இதன் பெயர் NIA.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications