ஜிஎஸ்டி வலைத்தளம் முடங்கியதால் மத்திய அரசு திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர்-1ஐ தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியினைச் செப்டம்பர் 10-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
ஜிஎஸ்டிஆர்-1 விற்பனை விவரங்களைத் தாக்கல் செய்யும் படிவம். ஜிஎஸ்டிஆர்-2 கொள்முதல் செய்த பொருட்களின் ரசீது விவரங்களைத் தாக்கல் செய்வது ஆகும். ஜிஎஸ்டிஆர்-3 விற்பனை மற்றும் கொள்முதல் என்று இரண்டையும் சேர்த்து தாக்கல் செய்வது ஆகும்.
ஜூலை மாத ஜிஎஸ்டி வரி தாக்கல்
ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்தினைத் தாக்கல் செய்யக் கடைசி நாள் ஆகஸ்ட் 25. ஜிஎஸ்டிஆர்-1ஐ தாக்கல் செய்யக் கடைசித் தேதி 5 செப்டம்பர் 2017, ஜிஎஸ்டிஆர்-2 படிவத்தினைத் தாக்கல் செய்யக் கடைசித் தேதி செப்டம்பர் 6 முதல் 10, ஜிஎஸ்டிஆர்-3 படிவத்தினைத் தாக்கல் செய்யக் கடைசித் தேதி 11 முதல் 15.
ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி வரி தாக்கல்
ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர்-1ஐ 2017-ம் ஆண்டு 16 முதல் 20 செப்டம்பர் மாதத்திற்குள் செய்ய வேண்டும். ஜிஎஸ்டிஆர்-2 படிவத்தினை 21 முதல் 25 செப்டம்பர் மாதத்திற்குள் செய்ய வேண்டும். ஜிஎஸ்டிஆர்-3ஐ 26 முதல் 30 செப்டம்பர் மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
தற்போது ஜிஎஸ்டிஆர்-1ஐ எப்படித் தாக்கல் செய்வது என்ற விவரங்களை இங்குப் பார்ப்போம்.
ரசீதுகள்
வணிகர்கள் முதலில் விற்பனை செய்துள்ள ரசீதுகளின் விவரங்களை எக்செல் அல்லது அவர்கள் பயன்படுத்தும் மென்பொருள் கோப்பு வடிவத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் பின்னர் அவற்றை ஜிஎஸ்டிஎன் தாக்கல் செய்யும் திஎரிவில் சென்று ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தினைத் தாக்கல் செய்ய வேண்டும்.
ஜிஎஸ்டிஎன் குறியீடு
வரி தாக்கல் செய்யும் முன் ஜிஎஸ்டி டின் எண் சரியாக உள்ளதா என்று சரிபார்க்கவும்.
எச்எஸ்என்/எஸ்ஏசி குறியீடுகள்
சரியான எச்எஸ்என்/எஸ்ஏசி குறியீடுகள் உள்ளிடப்பட்டுள்ளனவா என்பதை ரசீதுகள் வைத்துச் சரிபார்க்கவும். இந்தக் குறியீடுகளை ஜிஎஸ்டி செயலி மூலமாகச் சரிபார்த்துக்கொள்ளலாம்.
வரி விகிதங்கள்
விற்கப்பட்ட சரக்கு மற்றும் அளிக்கப்பட்ட சேவை இரண்டுக்கும் வரி விகிதங்கள் சரியாக உள்ளனவா என்று சரி பார்க்கவும். இல்லை என்றால் இதனையும் ஜிஎஸ்டி செயலி மூலமாகச் சரிபார்க்கலாம்.
எங்கு விற்பனை செய்யப்பட்டது?
மாநிலத்திற்குள் விற்கப்பட்டதா? இல்லை வெளி மாநிலங்களில் விற்கப்பட்டதா என்ற விவரங்களைச் சரிபார்க்கவும்.
தவறு நேர்ந்தால்
மேலே கூறிய விவரங்களில் நாம் தவறு செய்ய நேரிடும். எனவே அவற்றைச் சரிபார்த்த பிறகு வரி தாக்கல் செய்ய வேண்டும். வரி தாக்கல் செய்த பிறகு போது ஏதேனும் தவறு இருந்தால் அதனை அந்த மாதங்களினை தேர்வு செய்து சரி செய்ய வேண்டும்.
வரி தாக்கல் செய்ய வேண்டிய மாதங்கள்
ஜூலை மாத வரியினை ஆகஸ்ட் மாதத்திலும், ஆகஸ்ட் மாதத்தினைச் செப்டம்பர் மாதத்திலும் என அடுத்தடுத்த மாதங்களில் வரி தாக்கல் செய்ய வேண்டும். முதல் முறை என்பதால் இந்த இரண்டு மாதங்களுக்கு மட்டும் சில விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications