பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டியாக 429 ரூபாய்க்கு ஒரு ரீசார்ஜ் பேக்கினை அறிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இந்த ரீசார்ஜ் பேக் மூலமாக தினம் 1 ஜிபி தரவு மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளினை 90 நாட்களுக்குப் பெறலாம்.
பிஎஸ்என்எல் 429 ரூபாய் ரீசார்ஜ்
பிஎஸ்என்எல் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் 429 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து அனைத்து நெட்வொர்க்குகளுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் என அனைத்து அழைப்புகளையும் 90 நாட்களுக்கு இலவசமாக தினம் 1 ஜிபி வரம்பற்ற தரவுடன் பெற்றுப் பயன்பெறலாம்.
கேரளா
ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்தப் புதிய சலுகை கேரளா வாடிக்கையாளர்களுக்கு இல்லை.
குரல் மற்றும் தரவு திட்டம்
90 நாட்களுக்கு 429 என்ற போது ஒரு மாதத்திற்கு 143 ரூபாய் செலவில் அனைத்துக் குரல் அழைப்புகளும் இலவசம் மற்றும் தினம் ஒரு ஜிபி தரவு என்பது தற்போதைய சூழலில் மிகப் பெரிய லாபம் அளிக்கக் கூடிய தரவு திட்டம் என்கிறார் நிறுவனத்தின் தலைவர் ஆர் கே மிட்டல்.
பாதிப்படையும் ஏர்டெல்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்தப் புதிய தரவு மற்றும் குரல் அழைப்புத் திட்டம் ஏர்டெல் நிறுவனத்திற்குப் பெறும் இடியாக உள்ளது.
ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனம் மாநிலம் மற்றும் நகரத்தினைப் பொருத்து சலுகைகளை மாற்றி அமைத்துள்ளது. டெல்லி புற நகர்ப் பகுதியை சேர்ந்தவர்களாக இருந்தால் 5 ரூபாய் முதல் 399 ரூபாய் வரை திட்டங்களை ஏர்டெல் அறிவித்துள்ளது.
ஏர்டெல் 349 ரூபாய் ரீசார்ஜ்
ஏர்டெல் நிறுவனத்தின் 349 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் வரம்பற்ற உள்ளூர், வெளியூர் குரல் அழைப்புகள் மற்றும் தினம் 1 ஜிபி தரவு அனைத்தையும் 28 நாட்களுக்குப் பெறலாம்.
ஏர்டெல் 399 ரூபாய் ரீசார்ஜ்
இதுவே 399 ரூபாய்க்குச் சீசார்ஜ் செய்யும் போது இலவச ரோமிங், வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 28 நாட்களுக்கு 28 ஜிபி தரவை வழங்குகின்றது.
ஜியோ
டெலிகாம் நிறுவனங்கள் இடையில் உள்ள இந்த விலை போர் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சந்தைக்கு வந்த பிறகே அதிகரித்துள்ளது. தற்போது ஜியோ நிறுவனம் சந்தைக்கு வந்து 1 ஆண்டை நிறைவைச் செய்துள்ளது. அன்மையில் ஜியோ நிறுவனம் தங்களது பிரைம் பயனர்களுக்கு இரண்டு புதிய திட்டத்தினை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications