மத்திய அரசு திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர்-1ஐ தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியினைச் செப்டம்பர் 10-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
அதேப்போன்று ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர் 2 மற்றும் ஜிஎஸ்டிஆர் 3 ஆகிய வை தாக்கல் முறையினைச் செப்டம்பர் 25 முதல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி தாக்கல்
ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர் 1ஐ தாக்கல் செய்ய அக்டோபர் 5-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டிஆர் 2ஐ அக்டோபர் 10-ம் தேதிக்கு முன்பும், ஜிஎஸ்டிஆர் 3-ஐ அக்டோபர் 15-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
இணையதளம் முடக்கம்
நேற்றைய பிற்பகல் முதல் ஜிஎஸ்டிஎன் இணையதளத்தினை அதிக நபர்கள் அணுகியதால் தளம் முடங்கியது. எனவே அவர்களுக்குப் பின்னர் முயற்சிக்குமாறு தகவல் தெரிவிக்கப்பட்டது.
புகார்
ஜிஎஸ்டிஎன் தளத்தில் வரி தாக்கல் எய்வது மிகவும் கடினமாக உள்ளதாகவும், கணக்கு விவரங்களைப் பதிவேற்ற நீண்ட நேரம் வரை எடுத்துக்கொள்வதாகவும் பல நிறுவனங்கள் புகார் அளித்துள்ளன.
ஜிஎஸ்டிஆர்-1
ஜிஎஸ்டிஆர் 1-ஐ தாக்கல் செய்யும் போது நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் விவரங்கள் மற்றும் வழங்கப்பட்ட சேவையின் ரசீது உள்ளிட்ட விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications