இந்தியாவையே உலுக்கிய பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடையில், சந்தையில் புழக்கத்தில் இருந்த பணத்தில் 99 சதவீத தொகை வங்கி அமைப்பிற்குள் வந்த நிலையில், எவ்வளவு கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை என ரிசர்வ் வங்கி நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
15,000 கோடி ரூபாய்
வங்கி அமைப்பிற்குள் வந்த மொத்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் சுமார் 15,280 கோடி ரூபாய் யாருடையது என்றே தெரியாமல் பெயர் மற்றும் கணக்கு விபரங்கள் இல்லாமல் வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
இந்நிலையில் 99 சதவீத பணத்தை மீட்ட ரிசர்வ் வங்கி, எவ்வளவு கருப்பு பணத்தை கைப்பற்றியுள்ளது என்பதற்காக விபரத்தை அளிக்கவில்லை. இது மேலும் வர்த்தக சந்தையில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
எதிர்ப்புகள்
நவம்பர் 8ஆம் தேதி பரிதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடையை அறிவித்த முதலே சந்தையில் பல எதிர்ப்புகள் இருந்த நிலையில், ரிசர்வ் வங்கி பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் பெற்ற தொகையின் அளவை முழுமையாக தெரிக்காதது எதிர்கட்சிகள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்தது.
ரிசர்வ் வங்கி
நாடாளுமன்றத்தில் மீண்டும் கேள்விகள் எழுந்த காரணத்தால் முழுமையான தொகை, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு வாரியாக புள்ளிவிபரங்களை சேகரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.
டபுள் ஷிப்ட்
பணத்தை எண்ணும் பணி ரிசர்வ் வங்கிகளில் மிகவும் துள்ளியமான பணம் எண்ணும் இயந்திரத்துடன் டபுள் ஷிப்ட் முறையில் பணிகள் நடைப்பெற்று வருவதாக தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.
பதில்..
மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வகைப்படுத்தப்பட்ட சந்தை, வகைப்படுத்தப்படாத சந்தை, ஜிடிபி சரிவு குறித்த கேள்விகளுக்கு எவ்விதமான பதில்களும் அளிக்கவில்லை.


Click it and Unblock the Notifications