சிங்கப்பூர்: சிங்கப்பூரைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்கூட் விமான நிறுவனம் இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு நேரடி விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது
ஸ்கூட் நிறுவனத்தின் இந்த அதிரடி முடிவில் ஒரு வழிப் பாதையில் பயணம் செய்ய 12,000 ரூபாய் விமானக் கட்டணமும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து கோபன்ஹேகன் செல்ல 12,000 ரூபாய் முதல் 13,000 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும். இந்தப் பயணத்தின் போது 20 கிலோ வரை பைகளை எடுத்துச் செல்ல முடியும் மற்றும் உணவு அளிக்கப்படும்.
சுற்றுப் பயணக் கட்டணம் எவ்வளவு?
ஸ்கூட் இந்தியா நிறுவனத்தின் தலைவரான பாரத் மகாதேவன் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வர மொத்தமாக 26,000 மட்டுமே செலவாக என்று தெரிவித்தார்.
தற்போதைய கட்டணங்கள் எவ்வளவு?
தற்போது இந்தியாவில் இருந்து ஐரோப்பா நாடுகளுக்குச் செல்ல மட்டும் குறைந்தபட்சம் 45,000 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. இதுவே மத்திய கிழக்கு நாடுகளில் நிறுத்திச் செல்லப்படும் டிரான்சிட் விமானங்களில் சற்றுக் கட்டணம் குறைவாக இருக்கும்.
எப்படி, இவ்வளவு விலை குறைவு?
இந்த விமான நிறுவனத்தினை 5வது சுதந்திரம் என்று அழைக்கின்றார்கள். இதன் மூலம் இரண்டு நாடுகள் இடையில் நேரடி விமானங்களை ஸ்கூட் நிறுவனம் இயக்குகின்றது. எங்களிடம் 6வது சுதந்திரம் உள்ளிட்ட அனுமதிகள் உள்ளதால் மும்பை, டெல்லி, சென்னை மற்றும் கொல்கத்தாவில் இருந்து நேரடி விமானங்களைக் கோபன்ஹேகன், வியன்னா, கெய்ரோ மற்றும் மான்செஸ்டர் ஆகிய இடங்களுக்கு இயக்க முடியும் என்று மகாதேவன் தெரிவித்தார்.
விமானப் பயணத்தில் புதிய புரட்சி
விமானப் பயணத்தில் புதிய புரட்சியைச் செய்து வரும் ஸ்கூட் நிறுவனத்தில் உலகளவில் ஒரே வாரத்தில் 5,00,000 டிக்கெட்களைப் புக் செய்து சாதனை படைத்துள்ளது.
பிற நிறுவனங்கள்
ஸ்கூட் போன்று இந்தியாவின் பிற குறைந்த விலையில் விமானச் சேவை அளித்து வரும் நிறுவனங்களான ஸ்பைஸ்ஜெட் மற்றும் இண்டிகோவும் விரைவில் ஐரோப்பாவில் உள்ள லண்டன், கேட்விக் ஆகிய இடங்களுக்கு விமான் சேவையினை அறிமுகப்படுத்த உள்ளன.


Click it and Unblock the Notifications