நாட்டின் முன்னணி ஆன்லைன் உணவு ஆர்டர் மற்றும் ஆன்லைன் உணவகம் தேடும் நிறுவனமான சோமேட்டோ நிறுவனத்தின் முதலீடு செய்யச் சீனா நிறுவனம் திட்டமிடுகிறது.
அதுவும் 200 மில்லியன் டாலர். சோமேட்டோ தனது வர்த்தகத்தை இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் விரிவாக்கம் செய்து அதிகளவிலான வர்த்தகம் மற்றும் வருமானம் பெற்றுள்ள நிலையில் இந்தச் சீன நிறுவனத்தின் முதலீடு சோமேட்டோவிற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.
சீன நிறுவனம்
சீனாவின் ஒட்டுமொத்த ஈகாமர்ஸ் சந்தையைத் தனது கைகளுக்குள் வைத்திருக்கும் அலிபாபா, இந்தியாவில் பேடிஎம் நிறுவனத்தில் செய்த அதிகளவிலான முதலீடு மூலம் ஆன்லைன் பேமென்ட், ரீசார்ஜ் மற்றும் ஈகாமர்ஸ் சந்தையில் இறங்கியது.
தற்போது சோமேட்டோ நிறுவனத்தில் செய்த முதலீட்டு மூலம் ஆன்லைன் உணவு சந்தையிலும் இறங்குகிறது அலிபாபா.
உணவு சந்தை
இந்தியாவின் உணவு சந்தையில் ஆன்லைன் உணவு ஆர்டர் சேவை அளிக்கும் நிறுவனங்கள், பல மாதங்களாக மிகப்பெரிய வர்த்தம் மற்றும் வருமானம் ஈட்டுவதில் சிக்கலை சந்தித்து வருகிறது.
அனைத்தையும் கடந்து தற்போது 1.1 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்து நிற்கும் சோமேட்டோ நிறுவனத்தில் அலிபாபா முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
முதலீடு
அலிபாபா.காம் மற்றும் அதன் பேமென்ட் நிறுவனமான ஆன்ட் பைனான்சியல் கீழ் இருக்கும் அலிபே ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து சோமேட்டோ நிறுவனத்தில் 200 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது.
இதன் மூலம் அலிபாபா, சோமேட்டோ நிறுவனத்தில் இருந்து நிர்வாகக் குழுவில் ஆதிக்கம் செலுத்தும் அளவிலான பங்குகளைப் பெற உள்ளது.
ஆதிக்கம்..
200 மில்லியன் டாலர் முதலீட்டுக்கான பேச்சுவார்த்தை வெற்றி அடைந்தால், அலிபாபா மற்றும் அலிபே உதவியுடன் சோமேட்டோ தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் இப்பகுதி வர்த்தகத்தில் ஆதிக்கமும் செலுத்த முடியும்.
கடந்த முதலீடுகள்
செப்டம்பர் 2015இல் சோமேட்டோ டெமாஸ்க் மற்றும் விஓய் கேப்பிடல் நிறுவனத்திடம் இருந்து 60 மில்லியன் டாலர் முதலீட்டை பெற்றது. இப்போது இந்நிறுவனத்தின் மதிப்பு 960 மில்லியன் டாலர்.
வருவாய்
உணவு சந்தை வர்த்தகத்தில் இருந்த பிரச்சனைகளைக் கடந்து, 2017ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 80 சதவீதம் அதிக வருவாய்ப் பெற்றது சோமேட்டோ. இதன் மூலம் இந்நிறுவனம் 334 கோடி ரூபாய் அளவிலான தொகையை வருவாயாகப் பெற்றது.


Click it and Unblock the Notifications