நாட்டின் முன்னணி பயணிகள் விமான சேவை நிறுவனமான இண்டிகோ நிர்வாகம் தனது தாய் நிறுவனமான இண்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனத்திடம் சர்வதேச சந்தையில் இந்திய விமான நிறுவனத்திற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளது என்பதை முழுமையாக நம்பவைத்துள்ளது.
இதன் அடிப்படையில், இண்டர்குளோப் ஏவியேஷன் தற்போது சர்வதேச விமான சேவையில் இறங்க உறுதியாக முடிவு செய்வதில்லை.
முதலீடு
ஏற்கனவே அதிகளவிலான விமானத்தை வைத்துக்கொண்டு இந்தியாவில் விமான சேவையை அளித்து வரும் இண்டிகோ புதிய விமானத்தை வாங்கி தனது புதிய சர்வதேச வர்த்தகத்தில் இயங்க விரும்பவில்லை.
இதன் காரணமாக தற்போது சந்தையில் இருக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்து தணது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. சொல்லப்போனால் இது இண்டிகோ நிறுவனத்தின் வர்த்தக விரிவாக்கத்திற்கு பாதுகாப்பான வழி.
ஏர் இந்தியா இல்லைன்னா ஜெட் ஏர்வேஸ்
இந்நிலையில் இண்டிகோ நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தில் முதலீடு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இது வெற்றிகரமாக முடியவில்லை என்றாலும் இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய உறுதியாக உள்ளது.
விமான போக்குவரத்து
இதேவேளையில் இண்டிகோ நிறுவனம் உலக தரத்திலும், உலகலாவிய வர்த்தகத்திலும் செயல்படக்கூடிய வகையில் மேலாளர்களை தேடி வருகிறது.
தலைவர்
இண்டிகோ நிறுவனம் ராகுல் பாதியா மற்றும் ராகேஷ் கங்வால் ஆகியோரால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.
அன்னிய முதலீடு
ஆகஸ்ட் 28ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அன்னிய முதலீட்டு கொள்கை திட்டத்தில், இந்திய விமான நிறுவனத்தில் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் 49 சதவீதம் வரை முதலீடு செய்யலாம் என அறிவித்திருந்தது.
ஆனால் இது ஏர் இந்தியாவிற்கு பொருந்தாது.
65 சதவீதம் வாய்ப்புகள்
தற்போதைய நிலையில், இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் பயணிகளின் 65 சதவீத வர்ததகத்தை வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தான் பெறுகிறது.
மீதமுள்ளவற்றை ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் பெறுகிறது. சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்கள் தென்கிழக்கு ஆசிய மற்றும் மேற்கு ஆசிய பகுதியில் மட்டுமே சேவை அளித்து வருகிறது.
இண்டிகோ தற்போது இதனையே வாய்ப்பாக பார்க்கிறது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications