முதலாம் ஆண்டு வெற்றி விழா கொண்டாடும் ஜியோ.. நொந்து நூடுல்ஸான டெலிகாம் நிறுவனங்கள்..!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் துவங்கி நேற்றுடன் 1 வருடம் முடிவடைந்துள்ளது. ஜியோ சேவை 2016-ம் ஆண்டுச் செப்டம்பர் 5 முதல் வணிக ரீதியாகச் சேவைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய டெலிகாம் நிறுவனங்களில் சேவையினைத் துவங்கிய உடன் ஒரு பெறும் புரட்சியைச் செய்த நிறுவனம் என்றால் அது ஜியோ ஆகும்.

இலவச சேவை

இலவச சேவை

ஜியோ சேவை துவங்கும் போது மூன்று மாதம் வரை இலவச சேவை என்று அறிவிக்கப்பட்டுத் துவங்கியது போட்டி டெலிகாம் நிறுவனங்கள் இடையில் பெறும் விலை போரினையே ஏற்படுத்தியது.

போட்டி நிறுவனங்களின் நிலை

போட்டி நிறுவனங்களின் நிலை

இந்தியாவின் மிகப் பெரிய மொபைல் போன் நெட்வொர்க் சேவையினை அளித்து வந்த பார்தி ஏர்டெல், ஐடியா செல்லுலார், வோடாஃபோன் மற்றும் முகேஷ் அமபானியின் தம்பி அனில் அம்பானி தலைமையில் இயங்கி வரும் ரிலையன்ஸ் நிறுவனம் என அனைவரும் விலை குறைப்பினை செய்தன.

300 சதவீத கூடுதல் நன்மைகள்

300 சதவீத கூடுதல் நன்மைகள்

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் ஜியோ சேவை துவங்குவதற்கு முன்பு இருந்த ரீசார்ஜ் பேக்குகளின் விலையில் போட்டி நிறுவனங்கள் 300 சதவீதம் வரை கூடுதல் சலுகைகளை அளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

செப்டம்பர் முதல் சேவை துவக்கம்

செப்டம்பர் முதல் சேவை துவக்கம்

2016 ஜூலை 21 அன்று விரைவில் சேவை துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுச் செப்டம்பர் 5-ம் தேதி முதல் வணிக ரீதியாகப் பயன்பாட்டிற்கு வந்தது ஜியோ. சேவையினைத் துவங்கிய 170 நட்களில் 100 மில்லியன் வாடிக்கையாளர் பெற்று உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் டெலிகாம் நிறுவனம் என்ற பெயரை ஜியோ எடுத்தது.

நொடிக்கு நொடி வாடிக்கையாளர்கள்

நொடிக்கு நொடி வாடிக்கையாளர்கள்

ஜியோ சேவை வணிக ரீதியாகத் துவங்கப்பட்ட முதல் நாளில் நொடிக்கு 7 வாடிக்கையாளர்கள் இந்தச் சிம் கார்டினை வாங்கி வருகின்றனர் என்று இந்திய ஆசிய செய்தி சேவைக் கூறியது.

வரிசையில் நின்ற வாடிக்கையாளர்கள்

வரிசையில் நின்ற வாடிக்கையாளர்கள்

ரிலையன்ஸ் ஜியோவின் சேவையினைப் பயன்படுத்துவதற்காக மக்கள் ஆரவாரமாகக் குவிந்து வந்தனர். அனைத்து ரிலையன்ஸ் ஸ்டோர்களில் தினம் கலையில் வரிசையில் நின்று வாடிக்கையாளர்கள் சிம் கார்டுகளைப் பெற்றுச் சென்றனர்.

6 மாத இலவச சேவை

6 மாத இலவச சேவை

சேவைத் துவங்கப்பட்ட காலக் கட்டத்தில் இலவச குரல் அழைப்புகள், இலவச தரவு என 3 மாதத்திற்கு இலவசமாக அறிவிக்கப்பட்டு இருந்து. பின்னர் இந்த இலவசங்கள் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது.

100 மில்லியன் வாடிக்கையாளர்கள்

100 மில்லியன் வாடிக்கையாளர்கள்

2017 ஜூலை மாதம் ஜியோ நிறுவனம் 170 நாட்களில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தன் தனா தன் ஆஃபர்

தன் தனா தன் ஆஃபர்

ஜியோ சேவை வணிக ரீதியாகப் பயன்பாட்டிற்கு வந்த போதிலும் 6 மாதத்திற்கு முழுச் சேவையினையும் இலவசமாகவே வழங்கி வந்தது. பின்னர் மீண்டும் தன் தனா தன் என்ற பெயரில் 3 மாத இலவச ஆஃபரை ஜியோ அறிவித்து அதனை டிராயின் வேண்டுகோளுக்கு இணங்க வாப்பஸ் பெற்றது.

பிரீமியம் வாடிக்கையாளர்கள்

பிரீமியம் வாடிக்கையாளர்கள்

பிரீமியம் சீசார்ஜ் செய்தவர்கள் ஒர் வருடம் வரை பல தரப்பட்ட சலுகைகளைப் பயன்படுத்தி மகிழலாம் என்று அறிவித்த ஜியோ அதன் கீழ் தங்களது 60 சதவீத வாடிக்கையாளர்களை 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வைத்துள்ளது.

பட்ஜெட் போன்

பட்ஜெட் போன்

குறைந்த விலையில் 1,500 ரூபாய்க்கு ஜியோ போன் திட்டத்தினை அறிவித்த ஜியோ, மூன்று வருடத்திற்குப் பிறகு போனைத் திருப்பி அளித்தால் பணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 24 முதல் துவங்கப்பட்ட இதன் புக்கிங்கில் 3 நாட்களில் 6 மில்லியன் போன் புக் செய்யப்பட்டுள்ளது.

ஐடியா - வோடாபோன் இணைவு

ஐடியா - வோடாபோன் இணைவு

ஜியோவை சமாளிக்க முடியாமல் வோடாபோன் - ஐடியா நிறுவனங்கள் இணைவதாக அறிவித்தன அடுத்து இரண்டு நிறுவனங்களுக்கும் பெரிதாகப் பாதிப்புகள் இல்லை என்றாலும் கடந்த இரண்டு காலாண்டாக நட்டத்தினையே சந்தித்து வருகின்றது.

சிறு நிறுவனங்களை வாங்கும் போட்டி நிறுவனங்கள்

சிறு நிறுவனங்களை வாங்கும் போட்டி நிறுவனங்கள்

ஜியோவின் தாக்கத்தினைச் சமாளிக்கு ஏர்டெல் நிறுவனம் டெலினார் நிறுவனத்தினை வாங்கியது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் ஏர்செல் நிறுவனத்தினை வாங்கியது. ஆனால் ஏர்செல் நிறுவனத்தில் உள்ள சிக்கலால் இந்த இணைவு என்ன ஆனது என்றே தெரியவில்லை.

கடனில் இருக்கும் ஆர்காம்

கடனில் இருக்கும் ஆர்காம்

கடனில் சிக்கி தவித்து வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் சிஸ்டமா ஷாம் டெலிசர்வீசஸ் நிறுவனத்துடன் விரைவில் இணைய உள்ளது.

லாபம் சரிந்த நிறுவனங்கள்

லாபம் சரிந்த நிறுவனங்கள்

போட்டி நிறுவனங்களான ஐடியா, ஏர்டெல், வோடாபோன், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்டவை கடந்த இரண்டு காலாண்டாக 300 கோடிகளுக்கும் அதிகமாக வருவாயினை இழந்துள்ளதாக அறிவித்துள்ளன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

போட்டி நிறுவங்கள் பங்குகள் என்ன தான் விலை சரிந்து இருந்தாலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை உயர்ந்துக்கொண்டே சென்றுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+