250 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்த OYO ரூம்ஸ்..!
பட்ஜெட் ஹோட்டல் புக்கிங் சேவை அளிக்கும் OYO ரூம்ஸ் நிறுவனம் 250 மில்லியன் டாலர் தொகையை பல்வேறு முதலீட்டாளர்களை மூலம் முதலீட்டை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், சாப்ட்பேங்க் நிறுவனத்தின் சாப்ட்பாங்க் விஷன் பண்ட் நிறுவனத்தின் தலைமையில் சுமார் 250 மில்லியன் டாலர் முதலீட்டு பெற்றுள்ளது.

இந்த முதலீட்டு சுற்றில் சிகோயா இந்தியா, லையின்ஸ்பீடு வென்சர் பார்ட்னர்ஸ் மற்றும் கிரீன்ஓக் கேப்பிடல் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த முதலீட்டு சுற்றில் ஹீரோ எண்டர்பிரைசர்ஸ் நிறுவனமும் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஆன்லைன் பட்ஜெட் ஹோட்டல் புக்கிங் சேவையில் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் இந்த முதலீடு இந்நிறுவனத்தின் வர்த்தகம் அடுத்தகட்டத்திற்கு செல்ல இந்த முதலீடு பெரிய அளவில் பயன்படும்.


Click it and Unblock the Notifications