வங்கி கணக்கில் ஆதார் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா? சரிபார்ப்பது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசு வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் ஆதார் கார்டு இணைப்பதினை கட்டாயம் ஆக்கியுள்ளது. ஒரு வேலை இணைப்பினை செய்யவில்லை என்றால் வங்கி கணக்கை இயக்க முடியாது.

 

மத்திய அரசு அறிவிப்பின் படி 2017 ஜூன் 1 ஆக இருந்த ஆதார் வங்கி கணக்கு இணைப்பு 2017 டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் ஆதார் கார்டனை இணைக்குமாறு கோரிக்கை வைத்து வருகின்றன. ஒருவேலை நீங்கள் ஆதார் காடினை வங்கி கணக்குடன் இணைக்கவில்லை என்றால் அடுத்த முறை வங்கி கிளைக்கு நீங்கள் செல்லும் போது வங்கி அதிகாரிகள் உங்கள் ஆதார் எண்ணைப் பெற்று இணைப்பார்கள்.

உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வங்கியில் நீங்கள் கோரிக்கை வைத்து ஆவணங்களைச் சமர்ப்பித்து இருந்தாலும் சில நேரங்களில் இணைப்பு ரத்து செய்யப்பட்டு இருக்கவும் வாய்ப்புகள் உண்டு.

எனவே ஆதார் இணையதளத்தில் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்று எப்படிச் சரிபார்ப்பது என்று இங்குப் பார்ப்போம்.

படி 1

படி 1

www.uidai.gov.in என்ற ஆதார் இணையதளத்திற்குச் செல்லவும். ஆதார் மற்றும் வங்கி கணக்கு இணைப்பைச் சரிபார்த்தல் என்ற தெரிவை தேர்வு செய்யவும்.

படி 2

படி 2

உங்கள் ஆதார் எண் மற்றும் பாதுகாப்புக் குறியீட்டை உள்ளிட்ட பிறகு சமர்ப்பிக்கவும் என்ற பொத்தானை அழுத்தவும்.

படி 3

படி 3

ஆதார் கர்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச் சொல் அனுப்பப்படும். அதனை உள்ளிட்ட பிறகு நிலை உங்களுக்குக் காண்பிக்கப்படும்.

படி 4
 

படி 4

வெற்றிகரமாக மேலே கூறிய படிகளை எல்லாம் செய்த பிறகு ஆதார் கார்டு இணைக்கப்பட்டு இருந்தால் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டதற்கான விவரங்களைக் காண்பிக்கும்.

படி 5

படி 5

எந்த வங்கி கணக்கும் இணைக்கப்படவில்லை என்று தகவல் காண்பிக்கப்பட்டால் உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை வங்கி கிளைகளில் சமர்ப்பித்து இணைப்பைப் பூர்த்திச் செய்ய வேண்டும்.

 குறிப்பு

குறிப்பு

இணைப்பின் போது பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் சரியாகப் பொருந்த வேண்டும். இல்லை என்றால் இணைப்பினை செய்ய முடியாது.

வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்று மொபைல் எண் மூலம் எப்படிச் சரிபார்ப்பது?

*99*99*1# என்று மொபைலில் டையல் செய்து 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர் நீங்கள் உள்ளிட்ட ஆதார் எண்ணைச் சரிபார்த்து உறுதி செய்த பிறகு அதனைச் சமர்ப்பித்தால் இணைப்பின் நிலையினைப் பார்க்க முடியும்.

 

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள்

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள்

சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கை வைத்து இருந்தால் கடைசியாக எந்த வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைத்துள்ளார்களோ அதனைத் தான் காண்பிக்கும். எனவே பிற கணக்குகளுக்கு அருகில் உள்ள வங்கி கிளைகளில் சென்று சரி பார்க்கலாம். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் இருந்தால் மட்டுமே இணைப்பின் நிலையைச் சரிபார்க்க முடியும்.

உங்கள் வங்கி கணக..." data-gal-src="http:///img/600x100/2016/12/trainadharcard-06-1481021938.jpg">
வங்கி கணக்குடன் ஆதார்

வங்கி கணக்குடன் ஆதார்

<strong>உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது?</strong>உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது?

21 வங்கிகளை 15ஆகக் குறைக்கத் திட்டம்

21 வங்கிகளை 15ஆகக் குறைக்கத் திட்டம்

<strong>21 வங்கிகளை 15ஆகக் குறைக்கத் திட்டம்.. மத்திய அரசின் அடுத்த அதிரடி..!</strong>21 வங்கிகளை 15ஆகக் குறைக்கத் திட்டம்.. மத்திய அரசின் அடுத்த அதிரடி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to check if your bank account is linked to Aadhaar by online and mobile

How to check if your bank account is linked to Aadhaar by online and mobile
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X