2 மாத தொடர் சரிவில் சேவை துறை.. காரணம் ஜிஎஸ்டி..!
ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு பின் சேவைத்துறையின் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் பாதித்தது. இந்த பாதிப்பு ஆகஸ்ட் மாதத்திலும் தொடர்கிறது.
ஜூலை மாதத்தில் அமலாக்கம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி காரணத்தால் சேவைத்துறையில் ஆர்டர்களின் எண்ணிக்கா அதிகளவில் குறைந்ததுள்ளது.

இதன் எதிரொலியாக நிக்கி இந்தியா சேவை பிஎம்ஐ குறியீடு 45.9 புள்ளிகளில் இருந்து 47.5 புள்ளிகளாக மட்டுமே உள்ளது. 50 புள்ளிகள் அதிகமாக இருந்தால் மட்டுமே வளர்ச்சி பாதையில் இருப்பது உறுதி செய்யும்.
சேவைத்துறையின் பாதிப்புகள் அதிகளவில் தனியார் நிறுவனங்களின் வாயிலாக வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சரிவில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளும் குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications