மத்திய அரசு வரும் வெள்ளிக்கிழமை விமானப் பயணிகளுக்குப் புதிய விதிகளை விதிக்க இருக்கின்றது.
இந்தப் புதிய விதிகள் அமலுக்குக் கொண்டு வரப்பட்டால் உள்நாட்டு விமான டிக்கெட் புக் செய்யும் போது அடையாள அட்டை கட்டாயம் ஆக்கப்படும்.
எந்த அடையாளை அட்டைகள் தேவைப்படும்?
விமான டிக்கெட் புக் செய்யும் போது ஆதார், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் அல்லது பான் கார்டு விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.
வாக்காளை அடையாள் ஆட்டை
தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளதாகவும் ஆனால் இது குறித்த இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டுப் பயணம்
வெளிநாட்டுப் பயணம் செய்யும் போது அப்போதும் பாஸ்போர்ட் கட்டாயம்.
உலக நாடுகள்
பிற நாடுகளைப் போன்று இந்தியாவில் விமானப் பயணங்களுக்கு இது போன்ற நடவடிக்கைகள் பெரிதாக இல்லை. விமானப் போக்குவரத்துத் துறைத் தலைவர் பிஎஸ் பஹூல்லார் அன்மையில் மங்கோலியாவில் நடைபெற்ற உலகளவில் உள்ள விமானத் துறைகளின் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை முதல்
இதனை அடுத்து விமான டிக்கெட் புக் செய்யப் போது அடையாள கட்டாயம் தேவை எனப்படும் விதி வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வர அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது.
வேறு பெயரில் பயணம் செய்ய முடியாது
என்எப்எப் அடையாள கட்டாயம் எனப்படும் திட்டத்தினைக் கட்டாயம் என அறிவிக்கச் சில காலம் எடுத்துக்கொள்ளும் என்றும், இதன் படி ஒரே பயணி வேறு பெயரில் விமானப் பயணம் செய்ய முடியாது எனவும், பயணிகளுக்குப் பல காட்டங்களில் இதன் மூலம் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் உறுதிப்படுத்தப்படுகின்றது.
அடையாள அட்டை
சிவில் விமானப் போக்குவரத்துத் துறை உள்நாட்டு விமானப் பயணிகளுக்காகச் சில பிரதியாக அடையாள அட்டை வழங்க வாய்ப்பு இருப்பதாகவும், எனவே விரைவில் ஆதார் எண் பயன்படுத்தி விமான டிக்கெட் புக் செய்யும் முறை அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஆதார், பாஸ்போஎர்ட் இணைப்பு
எனவே பான் ஆதார் இணைப்பு போன்று விரைவில் ஆதார், பாஸ்போஎர்ட் இணைப்புக் கட்டாயம் என்பது அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications