ஒரு நாளுக்கு 5 மணிநேரம் தான் வேலை.. சம்பளம் 40,000 ரூபாயாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாதம் 40,000 ரூபாய் அளவிற்கு சம்பளம் வாங்க வேண்டும் என்றால், எந்த துறையில் வேலை செய்ய வேண்டும் என்று பலருக்கும் பல யோசனைகள் வந்திருக்கும், சிலருக்கு மட்டுமே சுய தொழில் என்பதை யோசித்திருப்பீர்கள்.

 

ஆனால் இங்கு எந்த துறையிலும் வேலைசெய்ய தேவையில்லை, சுய தொழில் செய்ய முதலீடும் தேவையில்லை, தென்னை மரம் ஏற தெரிந்தால் போதுமானது.

தென்னை மரம்

தென்னை மரம்

தென்னை மரத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் முக்கியமான விற்பனை பொருள் என்றால் அது தேங்காய். இதனை பறிக்கவே 40,000 ரூபாய் சம்பளம்.

நம்ப முடியவில்லையா.. அட உண்மையாதாங்க..

அதிக வளம்..

அதிக வளம்..

பொதுவாகவே அதிக மழை பெய்யும் இடத்திலும், தண்ணீர் அதிகமாக இருக்கும் இடத்தில் நீங்கள் அதிகளவிலான தென்னை மரங்களை பார்க்கலாம். குறிப்பாக கேரளா மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லை பகுதியிலும் அதிகளவில் இருக்கும்.

குறைந்தபட்சம்

குறைந்தபட்சம்

இப்பகுதியில் இருக்கும் விவசாய குடும்பங்கள் தங்களது இடத்தில் குறைந்தபட்சம் 10-50 மரங்கள் வைத்திருப்பார்கள் இது தமிழ்நாட்டின் எல்லையோர பகுதிகளின் நிலவரம்.

அதுவே கேரளாவிற்கு சென்றால் குறைந்தபட்சம் 50-100 மரங்களை வளர்ப்பார்கள். இத்தனை மரங்களில் இருந்து தோங்காய்களை பறிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது.

30 ரூபாய்..
 

30 ரூபாய்..

இதனால் தென்னை மரத்தில் ஏற தெரிந்த ஒருவரால் மட்டுமே சுலபமாக தென்னை மரம் ஏறி தேங்காய்களை பறிக்க முடியும்.

அப்படி ஒரு மரம் ஏற கேரளாவில் வாங்கப்படும் தொகை 30 ரூபாய். இது மிகவும் குறைந்தபட்ச தொகை. சில இடங்களில் 50 முதல் 60 ரூபாய் வரை அளிக்கப்படுகிறது.

இது மரத்தில் தேங்காய் இருந்தாலும், சரி இல்லையென்றாலும் சரி. பணம் கொடுத்தே ஆகவேண்டும்.

கணக்கீடு..

கணக்கீடு..

ஒரு சராசரியாக ஒரு நாளுக்கு 50 தென்னை மரம் ஏறினால் கூட 50X30= 1,500 ரூபாய்.

அதுபோக அவர்களுக்கு 20-30 தேங்காய்கள் எடுத்துக்கொள்வார்கள், இது அனைத்து பகுதிகளிலும் கொடுக்கப்படும் வழக்கம். ஆக ஒரு நாளுக்கு சராசரியாக சுமார் 2000 ரூபாய் பெறுகிறார்கள் இவர்கள்.

பணி நேரம்

பணி நேரம்

தென்னை மரம் ஏறும் பணி பொதுவாக காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையில் மட்டுமே நடக்கிற்து. வெளியில் முழுமையாக வந்த பின்பு யாரும் மரத்தின் மீது ஏறுவதில்லை.

இதனால் வெறும் 5 மணிநேர பணிக்கு 2,000 ரூபாய் பெறுகிறார்கள்.

பிற வேலைகள்

பிற வேலைகள்

5 மணிநேரம் மட்டுமே வேலை செய்யவதால் இவர்கள் மாலையில் வேறு வேலைக்கு கூட செல்ல முடியும். சிலர் டீ கடை, மளிகை கடை, பொருட்களை ஒரு இடத்தில் மருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது, டிரைவர் வேலை என பலதரப்பட்ட வேலை செய்கின்றனர். இதில் கிடைக்கும் வருமானம் தனிக்கணக்கு.

20 நாள்

20 நாள்

தென்னை மரம் ஏறுபவர்களுக்கு மாதம் முழுவதும் வேலை கிடைக்காவிட்டாலும், குறைந்தபட்சம் 20 நாள் வேலை கிடைக்கும். காரணம் இப்பகுதிகளில் மழையும் சரி, நிலத்திடி நீரும் சரி மிகவும் அதிகம்.

ஒரு நாளுக்கு 2,000 ரூபாய் எனில் 20 நாளுக்கு சுமார் 40,000 ரூபாய் வரையிலான பணத்தை இவர்கள் சம்பாதிக்கின்றனர்.

இளைஞர்கள்

இளைஞர்கள்

தற்போது கேரளா மற்றும் தமிழகத்தில் இளைஞர்கள் அனைவரும் ஆரவமுடன் படித்து கார்பரேட் அல்லது வொயிட் காலர் வேலைக்கு செல்லும் காரணத்தால் இந்த பணிகளை செய்ய ஆட்கள் மிகப்பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்படுகிறது.

இதனால் இவர்களுக்கு அளிக்கப்படும் சம்பளமும் அதிகரித்துள்ளது. 10 வருடத்திற்கு முன்னால் ஒரு மரம் ஏற வெறும் 5-10 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வரியில்லை

வரியில்லை

இதில் முக்கியமாக இவர்கள் வாங்கும் சம்பளத்திற்கு வரியும் கிடையாது. இந்த வேலை செய்யும் அனைவரும் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பதாக கணக்கு காட்டுவதால் இவர்களுக்கு 1 ரூபாய் அரிசி போன்ற அரசின் சலுகை திட்டங்கள் அதிகளவில் பலன் அளிக்கிறது.

இன்னமும் வறுமை கோட்டிற்கு கீழ்

இன்னமும் வறுமை கோட்டிற்கு கீழ்

கேரள பகுதியில் இருக்கும் மக்களுக்கு இதில் அதிகளவிலான வருமானம் இருந்தாலும், இதில் 80 சதவீதம் பேர் யாரும் முறையாக திட்டமிடலுடன் முதலீடு அல்லது சேமிப்பு செய்யாத காரணத்தால் இவர்கள் இன்னமும் வறுமை கோட்டிற்கு கீழேயே உள்ளனர்.

இவர்கள் சம்பாதிக்கும் பணத்தை மது அருந்துவதற்காகவும், புகைப்பிடிப்பதற்காவும் செலவு செய்கிறார்கள்.

 ரிஸ்க்

ரிஸ்க்

தென்னை மரம் ஏறுவது சாதாரண விஷயம் இல்லை, இதில் ரிஸ்க் மிகவும் அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான்.

வீடியோ

தென்னை மரம் ஏறுவது எப்படி தெரியுமா..? இந்த வீடியோவை பாருங்க.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

This jobs will give you 40k/month

This jobs will give you 40k/month |இந்த வேலைக்கு மாதம் 40,000 ரூபாய் சம்பளம்.. அட நிஜமாகதாங்க..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X