இத்தாலி நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனமான டுகாட்டி நிறுவனத்தை வாங்க சுமார் 12,000 கோடி ரூபாய் அதாவது 2 பில்லியன் டாலர் வரை கொடுக்க தயார் என ராய்ல் என்பீல்டு நிறுவனத்தின் தாய் நிறுவனமான எய்ச்சர் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
வோக்ஸ்வாகன்
டுகாட்டி நிறுவனம் தற்போது வோக்ஸ்வாகன் கட்டுப்பாட்டில் உள்ளது. ஏப்ரல் மாத்ததில் ஆடி மற்றும் வோக்ஸ்வாகன் நிறுவனத்திற்காக நிதி திரட்டும் முயற்சியில் வோக்ஸ்வாகன் நிர்வாகம் டுகாட்டி நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவு செய்தது.
5 நிறுவனங்கள்
இதன் படி இந்நிறுவனத்தை பெற பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு வந்த நிலையிலும் வோக்ஸ்வாகன் நிர்வாகத்தில் வெடித்துள்ள பிரச்சனைகளுக்கு மத்தியிலும் இந்நிர்வாகம் 5 நிறுவனங்களை தேர்ந்தெடுத்துள்ளது.
ஆசியாவில் இருந்து ஓரே நிறுவனம்
டுகாட்டி நிறுவனத்தை பெற ஹார்லி டேவிசன் போன்ற முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்டு வரும் நிலையில், ஆசியாவில் இருந்து எய்ச்சர் நிறுவனம் மட்டுமே இப்போட்டியில் களமிறங்கியுள்ளது.
ராய்ல் என்பீல்டு
இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களுக்கு கனவாக இருக்கும் புல்லட் பைக்குகளை தயாரிக்கும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தாய் நிறுவனம் தான் எய்ச்சர் மோட்டார்ஸ்.
மிகப்பெரிய வாய்ப்பு
இந்தியாவில் புல்லட் விற்பனை தற்போது வரலாறு காணாத விதமாக வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், அதிவேக பைக் பிரிவிலும் தனது முத்திரையை பதிக்க முடிவு செய்துள்ளது எய்ச்சர் மோட்டார்ஸ். இதன் அடிப்படையிலேயே தற்போது டுகாட்டி நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளது எய்ச்சர்.


Click it and Unblock the Notifications