ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும், விற்பனையில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் ஹெச்டிசி நிறுவனத்தின் விற்பனை வர்த்தகத்தை கூகிள் கைப்பற்ற போராடி வருகிறது.
கூகிள் நிறுவனம் தற்போது பிக்செல் 2 ஸ்மார்ட்போனை தயாரித்து வருகிறது. இந்நிலையில் ஹெச்டிசி நிறுவனத்தின் விற்பனையை மட்டும் கைப்பற்றினால் தனது வர்த்தகத்தையும் விரிவாக்கம் செய்ய முடியம் என நம்புகிறது கூகிள்.

இந்த ஒப்பந்தத்தில் ஹெச்டிசி நிறுவனத்தின் விர்சுவல் ரியாலிட்டி வர்த்தகம் பங்குபெறாது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஹெச்டி நிறுவனம் தற்போது மிகப்பெரிய நிதி சிக்கலில் உள்ளது. அதுமட்டும் அல்லாமல் தற்போது சமீபத்தில் செய்யப்பட்ட அறிமுகங்கள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளது.
இதன் காரணமாக ஹெச்டிசி நிறுவனத்தின் நிதிநிலை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதால் கூகிள் நிறுவனத்தின் இந்த இணைப்பு மூலம் இரு நிறுவனங்களுக்கு நன்மை உண்டு.


Click it and Unblock the Notifications