2040இல் ஜாகுவார் கார் இப்படியும் இருக்கலாம்..!
டாடா மோட்டார்ஸ் விற்பனை கட்டுப்பாட்டில் இருக்கும் ஜாகுவார் நிறுவனம் 2040ஆம் ஆண்டுக்கான பியூச்சர் டைப் காரின் மாதிரி வடிவடத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளது.
இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய அளவில் மாறி வருகிறது. குறிப்பாக சில முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வரும் தலைமுறையினருக்கான காரை வடவமைப்பதிலும், அதனை உருவாக்குவதிலும் மிகப்பெரிய ஆராய்ச்சியை செய்து வருகிறது.

இந்த எதிர்கால போட்டியில் தான் பங்கேற்கபோகிறது என்று சந்தையில் இருக்கும் போட்டி நிறுவனங்களுக்கு செய்தி அளிக்கும் விதமாக தனது புதிய பியூச்சர் டைப் காரின் வடிவத்தை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த கார் எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆட்டோமொபைல் தொழில்நுட்பமாக கருதப்படும் ACES தொழில்நுட்பத்தின் கீழ் உள்ளதாகவும் ஜாகுவார் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications