தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு பினாமி கணக்கில் மட்டும் 246 கோடி பிடிபட்டுள்ளது?

வருமான வரித்துறை பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளுக்குப் பிறகு ஒரு கணக்கில் இருந்த மட்டும் ஒரே பரிவர்த்தனைக்காக 246 கோடிகள் பரிவத்தனை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்தப் பரிவர்த்தனையில் முக்கிய அரசியல் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாகவும் இது பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நவம்பர் 8 மற்றும் டிசம்பர் 30-ம் தேதிக்கு இடையில் நடந்தது என்றும் தெரியவந்துள்ளது.

240 கோடி

240 கோடி

மேலும் 441 வங்கி கணக்கில் 240 கோடி ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர்களின் சரியான விவரங்கள் வங்கிகளிடம் இல்லை என்றும் அதனால் அந்த வங்கி கணக்கை வைத்துள்ளவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

27,739 வங்கி கணக்கு

27,739 வங்கி கணக்கு

இவை மட்டும் இல்லாமல் 27,739 வங்கி கணக்கை வைத்துள்ளவர்கள் அதிகப்படியான பரிவர்த்தனைகள் செய்து இருப்பதாகச் சந்தேகத்தின் பேரில் நொட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 246 கோடி

246 கோடி

கருப்புப் பணத்திற்கு எதிரான வருமான வரித் துறையின் நடவடிக்கையில் 246 கோடி ரூபாய் பரிவர்த்தனை வங்கி வேலை நேரம் முடிவடைந்த பிறகு நடைபெற்று இருப்பதும் தெரிய வந்துள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது அதிகத் தொகை பரிவர்த்தனை செய்ததில் இதுவும் ஒன்று என்பது தெரிய வந்துள்ளது.

பிரதான் மந்திரி கரிப் கல்யான் யோஜனா

பிரதான் மந்திரி கரிப் கல்யான் யோஜனா

இதனைக் கண்டறிந்த அதிகாரிகள் பிரதான் மந்திரி கரிப் கல்யான் யோஜனா திட்டத்தின் கீழ் வரி மற்றும் அபராதத்தினைச் செலுத்த வேண்டும் என்று நோட்டிஸ் அனுப்பியதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.

இரண்டாம் கட்ட சோதனை

இரண்டாம் கட்ட சோதனை

பண மதிப்பு நடவடிக்கைகள் முடிந்து வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசங்கள் எல்லாம் முடிந்த பிறகு தற்போது இரண்டாம் கட்ட வங்கி கணக்குகள் ஆய்வுப் பணி நடைபெற்று வந்துள்ளது. இதற்கான வங்கி கணக்குத் தகவல்களை ஆர்பிஐ வங்கி அளித்துள்ளது.

நோட்டிஸ்

நோட்டிஸ்

ஆர்பிஐ சந்தேகத்திற்கு இணங்க அளித்துள்ள 27,739 வங்கி கணக்குகளுக்கு மின்னஞ்சல் மூலமாக நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் 18,220 வங்கி கணக்குகளில் இருந்து பதில் வந்துள்ளது. ஆனால் பிறர் தங்களது கணக்கு விவரங்களைத் தெரிவிக்க விரும்பவில்லை.

வாடிக்கையாளர்கள் விவரங்கள் பெறாத வங்கிகள்

வாடிக்கையாளர்கள் விவரங்கள் பெறாத வங்கிகள்

ஆர்பிஐ வங்கி கணக்கு வைத்துள்ள அனைவரும் வாடிக்கையாளர் விவரங்களையும் வங்கிகள் பெற்று இருக்க வேண்டும். இருப்பினும் 441 வங்கி கணக்குகளின் விவரங்களை வங்கிகள் பெறாமல் கணக்கை அளித்துள்ளது எப்படி என்பது கேள்விக்குறியாக உள்ளது.

 வருமான வரித் துறையினரை திருப்தி படுத்தாத பதில்கள்

வருமான வரித் துறையினரை திருப்தி படுத்தாத பதில்கள்

நோட்டிஸ் அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களில் பலர் அளித்துள்ள பதில்கள் வருமான வரித் துறையினரை திருப்திப் படுத்தவில்லை. இந்த வங்கி கணக்குகளில் 3,600 கோடிகள் வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

வணிகர்கள்

வணிகர்கள்

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது மாட்டியுள்ளவர்கள் அனைவரும் வணிகர்கள். வங்கி கணக்கில் டெபாசிட் செய்த தொகையினை இவர்கள் தங்களது வருவாய் எனக் கணக்கு காண்பித்துள்ளனர். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு 1 கோடி வரை வங்கி கணக்கில் டெபாசிட் செய்தவர்களின் கணக்குகளையும் வருமான வரித் துறை கண்காணித்து வருகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+