ஆர்பிஐ கவர்னர் பதவியைத் நான் ராஜிநாமா செய்யவில்லை: ரகுராம் ராஜன்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முன்னால் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் வியாழக்கிழமை மீண்டும் தான் மத்திய வங்கியில் இரண்டாம் முறை பணியாற்ற தயார் என்றும் தான் செய்ய வேண்டிய பல பணிகள் இன்னும் மிச்சம் இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.

தான் எழுதியுள்ள 'I do what I do' என்ற புத்தகத்தை வெளியிட்டபிறகு இந்தியா டுடே பத்திரிக்கைக்கு ரகுராம் ராஜன் அளித்த பேட்டியில் நிதி சிக்கல்கள், பண மதிப்பு நீக்கம், வரா கடன் மற்றும் பொருளாதார வளர்ச்சி பற்றி விளக்கமாக இங்குப் பார்ப்போம்.

ராஜிநாமா செய்யவில்லை

ராஜிநாமா செய்யவில்லை

பதவியில் நீட்டிக்க விருப்பம் இல்லாமல் சென்று விட்டீர்களா என்று கேட்கப்பட்டதற்க்கு ஆர்பிஐ கவர்னர் பதவியை நான் இன்னும் ராஜினாமா செய்யவிலை. எனது பதவிக்காலம் முடிவுக்க வந்ததினால் தான் சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.

மீண்டும் பணியாற்ற தயார்

மீண்டும் பணியாற்ற தயார்

முன்னால் ஆர்பிஐ கவர்னரான ரகுராம் ராஜன் நாட்டுக்காகத் தான் தேவை என்று அரசு நிணைத்தால் தான் மீண்டும் பணியாற்ற தாயார் என்று கூறினார்.

பண மதிப்பு நீக்கம்

பண மதிப்பு நீக்கம்

தான் ஆர்பிஐ கவர்னராக இருந்தபோது தன்னிடம் பண மதிப்பு நீக்கம் குறித்து மத்திய அரசு கேட்டதாகவும் அதனால் குறைந்த நாட்களில் மத்திய அரசுக்கு ஏற்படும் செலவு மற்றும் நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்கும் போது குறைந்த அளவே பயன் இருக்கும் என்று தனது குழுவுடன் விளக்கியதாகவும் தெரிவித்தார்.

அரசின் பணமதிப்பு நீக்க முடிவு

அரசின் பணமதிப்பு நீக்க முடிவு

மத்திய அரசு பணமதிப்பு நீக்கம் குறித்து ஆர்பிஐ வங்கியிடம் அனுமதி ஏதும் பெற தேவையில்லை. சட்டத்தினை இயற்றி மத்திய அரசு நடவடிக்கைகளை அமல்படுத்தலாம் என்றார் ரகுராம் ராஜன். ஆனால் தனது பதவிக் காலத்தில் இது குறித்த தேதிகள் ஏதும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார்.

ஆச்சர்யம்

ஆச்சர்யம்

நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பு நீக்கம் பற்றி அறிவிப்பு வந்தது தனக்கு ஆச்சர்யமாக இருந்ததாகவும் அதன் பின்னர்த் தான் தன்னிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற இந்தியா வந்ததாகவும் தெரிவித்தார்.

தாக்கம் குறித்துக் கூற முடியாது

தாக்கம் குறித்துக் கூற முடியாது

பண மதிப்பு நீக்கம் நடவடிக்கையினால் ஏற்பட்ட விளைவுகள் முழுமையாக முடியாத நிலையில் தற்போதைக்கு முழுமையான தாக்கம் என்ன என்று கூற முடியாது என்றும் கூறினார். மேலும் ஜேபி மார்கன் நிறுவனம் அளித்த 1 முதல்2 சதவீத ஜிடிபி வளர்ச்சி விகிதம் குறைந்ததற்குப் பண மதிப்பு நீக்கம் தான் காரணம் என்ற அறிக்கையினை நினைவு கூர்ந்தார்.

இந்தியாவிற்குத் திரும்ப வருவீர்களா?

இந்தியாவிற்குத் திரும்ப வருவீர்களா?

இந்தியாவிற்குத் திரும்ப வர விருப்பம் உள்ளதா அல்லது அமெரிக்காவில் செய்து வரும் கற்பிக்கும் பணியையே தொடர விருப்பமா என்ற கேட்கப்பட்ட கேள்விக்குத் திரும்ப வருவதற்கு விருப்பம் தான் ஆனால் யாரவது தொடர்ந்து அழைத்தால், தேவை இருந்தால் கண்டிப்பாக வருவேன் என்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Raghuram Rajan willing to come back if it makes big difference because not resigned

Raghuram Rajan willing to come back if it makes big difference because not resigned
Story first published: Saturday, September 9, 2017, 13:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X