நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் பல்வேறு விதமான பிரச்சனைக்கு மத்தியில் தற்போது மிகழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்போசிஸ் நிறுவனம் அடுத்த 1-2 வருடத்தில் சுமார் 6,000 ஊழியர்களை புதிதாக நிறுவனத்தில் சேர்க்க உள்ளது.
6,000 ஊழியர்கள்
இந்நிறுவனத்தில் இருந்து விஷால் சிக்கா வெளியேறிய பின்பு, ஒட்டுமொத்த இந்திய ஐடி நிறுவனங்களும் ஊழியர்களை வெளியேற்ற திட்டமிட்டு வரும் இந்த சூழ்நிலையில், கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் 6,000 ஊழியர்களை பணியில் நியமிக்க உள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா
அதேபோல் இன்போசிஸ் இந்தியாவில் மட்டும் அல்லாமல் ஆமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் தனது ஊழியர்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
விஷால் சிக்கா
தற்போதைய நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து விஷால் சிக்கா சிஇஓ பதவியில் இருந்து ராஜினாமா மற்றும் சேர்மன் சேஷசாயி மற்றும் இதர 3 நிர்வாக உறுப்பினர்கள் வெளியேறிய பின்பு இத்தகைய நடவடிக்கையை இன்போசிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய நிர்வாகம்
விஷால் சிக்காவின் வெளியேற்றத்திற்கு பின் தற்போது இன்போசிஸ் பிரவின் ராவ் மற்றும் நந்தன் நிலகனி தலைமையில் இயங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications