சென்னை: ரிலையன்ஸ் ஜியோவின் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் திட்டங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் உண்மையிலேயே மிகவும் கவர்ச்சிகரமானதாக உள்ளது. இதனைத் தொடர்ந்து இதேபோன்ற சேவையை ஏர்டெல், ஐடியோ ஆகிய நிறுவனங்களும் அளிக்கத் துவக்கியுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் அனைத்து முன்னணி நிறுவனங்களும் தற்போது ஜியோவிற்கு இணையான கட்டணத்தில் சேவையை அளிக்கத் தொடர்ந்து கட்டணத்தைக் குறைத்து, விலை போரை உருவாக்கியுள்ளது.
தொழில்நுட்பம்
ஜியோ உடன் கட்டணத்தில் மட்டும் போட்டி போடாமல் தொழில்நுட்ப ரீதியில் போட்டி போட முடிவு செய்துள்ளது நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள்.
இதன் படி ஜியோ பயன்படுத்தும் VoLTE தொழில்நுட்பத்தை ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்களும் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளது ஏர்டெல் மற்றும் ஐடியா.
இண்டர்நெட் டேட்டா
தற்போது மக்கள் அனைவரும் மொபைல் இண்டர்நெட்டை அதிகளவில் பயன்படுத்தி வரும் காரணத்தால், அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் தற்போது மொபைல் டேட்டா மையமாகக் கொண்ட சேவைத் திட்டத்தையே அறிவித்து வருகிறது.
இதன் பிடி அனைத்து முன்னணி நிறுவனங்களும் ஒரு நாளுக்கு 1 ஜிபி இண்டர்நெட் டேட்டா என்ற அடிப்படையிலான சேவையை இயக்கி வருகிறது.
முன்னணி நிறுவனங்கள்
தற்போது சந்தையில் ஜியோவின் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும், தான் இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என முடிவில் ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் அதிரடி திட்ட மாற்றத்துடன் புதுப்புது திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.
அந்தப் போட்டியில் அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் பங்குபெற திட்டமிட்டு 3ஜி மற்றும் 4ஜி சேவையில் புதிய ஆபர்களை அறிவித்துள்ளது.
ஒட்டுமொத்த ஆஃபர்களின் விபரம்..
சந்தையில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஆஃபர்களின் முழுமையான விபரம். புகைப்படம் எக்னாமிக்ஸ் டைம்ஸ்


Click it and Unblock the Notifications