நாட்டின் மறைமுக வரியை முழுமையாக ஜிஎஸ்டி மூலம் மாற்றிய மத்திய அரசு, தற்போது 56 வருடங்களாக நடைமுறையில் இருக்கும் நேரடி வரி விதிப்பை மாற்ற முடிவு செய்துள்ளது.
நேரடி வரி விதிப்பை மாற்ற முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு கூட முயற்சி செய்து, கடைசியில் அமலாக்கம் செய்ய முடியாமல் தோற்றுப்போனது. இந்நிலையில் இந்த முயற்சியை தற்போது மோடி தலைமையிலான அரசு கையில் எடுத்துள்ளது.
டிடிசி வரி விதிப்பு
2009ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட டிடிசி வரி விதிப்பில் அனைத்து விதமான வருமானங்களின் மீதும் வரி விதிக்கப்பட்டது. குறிப்பாக வைப்பு நிதி மீதான வருமானம், பிபிஎப் முதலீடு, பங்கு விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானம் என அனைத்தின் மீதும் வரி விதிக்கப்பட்டது.
ஆனால் அடிப்படை விரி விதிப்பின் தொகை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
5 லட்சம் ரூபாய்
டிடிசி வாயிலாகவே வரி விதிக்கப்பட்டால், குறைந்தப்பட்சம் வரி விதிப்பு அளவு 5 லட்சமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. காரணம் அனைத்து முதலீட்டு திட்டத்தின் மீதும் வரி விதிக்கப்படுவதால் அடிப்படை வரி விதிப்பு அளவு சற்று அதிகமாகவே இருக்கும் என தெரிகிறது.
தற்போது இதன் அளவு 2.5 லட்சம் ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப கட்ட ஊழியர்கள்
வருடாந்திர வருமானத்தில் 5 லட்ச ரூபாய்க்கு வருமான விலக்கு அளித்தால், நாட்டில் அதிகமாக இருக்கும் ஆரம்பகட்ட ஊழியர்கள் அதிகளவில் பயன்அடைவார்கள்.
மத்திய அரசு
நேரடி வரி விதிப்பில் மத்திய அரசு கொண்டு வரும் அடிப்படை வரி விதிப்பு அளவை பொருத்தே அனைத்து விதமான லாபங்களும் கிடைக்கும். 5 லட்சம் ரூபாய் இல்லாமல் பிற அனைத்து முதலீட்டு திட்டத்திலும் வரியை விதித்தால் மக்கள் மிகப்பெரிய பாதிப்பிற்கு உள்ளாவார்கள்.
ஜிஎஸ்டி
மோடி தலைமையிலான அரசு ஜிஎஸ்டி-யை காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்தில் சிறிதளவிலான மாற்றம் மட்டுமே செய்து அமல்படுத்து. இதில் வரி விதிப்புகள் அளவு மட்டுமே மாற்றப்பட்டதாகவும், மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் மட்டுமே வித்தியாசம் அளிக்கப்பட்டது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications