லிங்கிடுஇன் நிறுவனம் பைனான்ஸ், இண்டர்நெட், டெக்னாலஜி துறைகளில் மக்களை அதிகளவில் கவர்ந்த மற்றும் இத்தளத்தில் தேடப்பட்ட அதிகாரிகளை பட்டியலிட்டுள்ளது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் ஏற்கனவே மக்களால் அதிகம் தேடப்பட்ட சிஇஓக்களின் பட்டியலை வெளியிட்ட நிலையில் தற்போது பைனான்ஸ், இண்டர்நெட், டெக்னாலஜி துறையை பற்றி இப்போது பார்ப்போம்.
அலோக் ரோதின்குட் கெஜிரிவால் (இண்டர்நெட்)
இண்டர்நெட் துறையில் அதிகம் தேடப்பட்ட அதிகாரி என்றால் கேம்ஸ்2வின் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியா அலோக் ரோதின்குட் கெஜிரிவால் தான்.
உமங் பேடி (இண்டர்நெட்)
உமங் பேடி பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தென் ஆசியாவின் நிர்வாக இயக்குனர் ஆவார்.
அமித் அகர்வால் (இண்டர்நெட்)
ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான்-இன் இந்தியா நிறுவனமான அமேசான் இந்தியாவின் துணை தலைவர் மற்றும் கன்ட்ரி மேனேஜராக இருக்கும் அமித் அகர்வால் இப்பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளார்.
குனால் ஷா (இண்டர்நெட்)
ஸ்னாப்டீல் கைப்பற்றிய ப்ரீசார்ஜ் நிறுவனத்தின் நிறுவனர் தான் குனால் ஷா. இவர் சமுக வலைதளத்தில் மிகவும் ஈடுப்பாடு உடன் உள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஷிஷ் ஷா (இண்டர்நெட்)
ஆன்லைன் பர்னீசர் நிறுவனமான பெப்பர்ப்ரை-யின் நிறுவனர் தான் அஷிஷ் ஷா.
அஷிஷ் கஷ்யாப் (இண்டர்நெட்)
ஆன்லைன் பஸ் புக்கிங் சேவை அளிக்கும் நிறுவனமான ரெட்பஸ்-இன் நிறுவனர் மற்றும் சிஇஓ தான் அஷிஷ் கஷ்யாப்
அமர்ஜித் சிங் பத்ரா
இந்தியாவில் பழைய பொருட்கள் அல்லது பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமான ஒஎல்எக்ஸ் தற்போது மிகப்பெரிய வர்த்தக வெற்றியை அடைந்தது மட்டும் அல்லாமல் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.
ஒஎல்எக்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் முக்கிய காரணம் தலைமை நிர்வாக அதிகாரியான அமர்ஜித் சிங் பத்ராவின் திட்டங்கள் தான்.
கிரிஷ் மாத்துருபூதம் (டெக்னாலஜி)
சென்னையை தலைமையாக கொண்டு உலகம் முழுவதும் சேவை அளித்து வரும் பிரெஷ்டெக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ கிரிஷ் மாத்துருபூதம் டெக்னாலஜி துறையின் லிங்கிடுஇன் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
ஹர்ஷில் மத்துர் (டெக்னாலஜி)
இவர் ரேசர்பே நிறுவனத்தின் சிஇஓ மற்றும் துணை நிறுவனர் ஆவார்.
தாரு கபூர் (டெக்னாலஜி)
இன்றைய இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான டேட்டிங் ஆப் நிறுவனமான டின்டர் நிறுவனத்தின், இந்திய கிளையின் தலைவரான தாரு கபூர் மக்கள் அதிகம் தேடப்பட்ட ஒருவராக உள்ளார்.
அமிதாப் ரே (டெக்னாலஜி)
இவர் ஏரிக்சன் குளோபல் சர்வீசஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆவார்.
ஸ்மிதா நாயர் ஜெயின் (டெக்னாலஜி)
ஸ்மிதா, சியர் ஹோல்டிங்ஸ் இந்தியா நிறுவனத்தின் உயர் பரிவின் துணை தலைவர் ஆவார்.
பிபின் பிரீத் சிங் (டெக்னாலஜி)
ஆன்லைன் பேமென்ட் சேவை அளிக்கும் மொபிகிவிக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓவான பிபின் பிரீத் சிங் மக்களால் அதிகம் தேடப்பட்ட ஒருவராக உள்ளார்.
தபன் சிங்கெல் (பைனான்ஸ்)
தபன் சிங்கெல் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ ஆவார்.
அதில் ஷெட்டி (பைனான்ஸ்)
இவர் பேங்க்பஜார்.காம் நிறுவனத்தின் சிஇஓ.
அந்தோனி ஜேகப்
அப்பலோ முனிச் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சிஇஓ அந்தோனி ஜேகப் பைனான்ஸ் துறையில் அதிகம் தேடப்படும் ஒருவராக உள்ளார்.
ஜித்தேதிரா குப்தா (பைனான்ஸ்)
இவர் சிட்ரஸ் பே மற்றும் பேயு இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.
மனவ் ஜீத் (பைனான்ஸ்)
ஆன்லைன் கிரேடிட்கார்டு, ஹோம் லோன், ஆட்டோ லோன் அனைத்து அனைத்தும் ஒப்பீடு செய்து எது சிறந்த தேர்வு என்பதை மக்களுக்கு அளிக்கும் ஒரு சேவை ருமிக்யூ நிறுவனம் அளிக்கிறது. இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ தான் மனவ் ஜீத்.
ஹன்சி மெஹ்ரோத்ரா (பைனான்ஸ்)
இவர் மனி மேனேஜ்மென்ட் இந்தியா நெட்வொர்க் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் எடிட்டர் ஆவார்.
அமித் சேத்தி (பைனான்ஸ்)
இவர் ஆக்சிஸ் வங்கியின் தலைவர் மற்றும் தலைமை தகவல் அதிகாரி ஆவார்.


Click it and Unblock the Notifications