மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் வராத பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சிகளை இந்தியாவில் பயன்படுத்துவது மற்றும் முதலீடு செய்வதை கடந்த சில மாதங்களாக எதிர்த்து வரும் ஆர்பிஐ விரைவில் புதிதாக டிஜிட்டல் கரன்சியை வெளியிட இருக்கின்றது.
பிட்காயின் போன்றவற்றைப் பயன்படுத்துவது சரியானது அல்ல என்று ஆர்பிஐ வங்கி இயக்குனர் சென் அவர்கள் இந்தியா ஃபின்டெக் கான்பிரன்சில் கூறினார்.
அரசின் கட்டுப்பாட்டில் அல்ல
பிட் காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் அரசின் கட்டுப்பாட்டில் இயங்குபவை அல்ல. அவை தனியார் கரன்சிகள் என்றும் சென் விளக்கினார்.
ஆர்பிஐ கிரிப்டோ கரண்சி
எனவே அரசுடன் இணைந்து ஆர்பிஐ வங்கி ஃபியட்(FIAT) கிரிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் கரன்சியை வெளியிடும் திட்டத்தில் உள்ளது. இதனால் பணமாக இல்லாமல் டிஜிட்டலாகவும் பணத்தை வைத்துக்கொள்ளலாம். இதுபற்றி மத்திய வங்கி ஆராய்ந்து வருவதாகவும் சென் கூறினார்.
ஆர்பிஐ சோதனை முயற்சி
ஃபியாட் கிரிப்டோ கரன்சியை எதிர்பார்க்கும் சிலரை ஆர்பிஐ தேர்வு செய்துள்ளதாகவும், இந்திய ரூபாய்க்கு மாற்றான பிட்காயின் அவர்களுக்கு அளிக்கப்படும் என்று சோதனை முறையில் இதனை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் சென் தெரிவித்தார்.
அதிகரிக்கும் முதலீடு
அமெரிக்க திபர் பதவிக்கு டொனால்டு டிரம்ப் அவர்கள் வந்த பிறகு பிட்காயின் போன்ற கரன்சிகளில் முதலீடு செய்வதும் அதன் மதிப்பு பல மடங்குகள் உயர்ந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலீட்டாளரின் ரிஸ்க்
பிட்காயின் போன்ற நாணயங்களில் முதலீடு செய்வது என்பது முதலீட்டாளரின் ரிஸ்க்கை பொருத்தத்து என்று ஆர்பிஐ பிப்ரவரி முதல் அறிக்கைகள் மூலமாகத் தெரிவித்து வருகின்றது.
ஆர்பிஐ விளக்கம்
பிட்காயின் போன்ற நாணயங்கள் சாத்தியமான நிதியியல், சட்ட, வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான அபாயங்கள் குறித்தும் ஆர்பிஐ அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்து வருகின்றது.


Click it and Unblock the Notifications