இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியால் வங்கித் துறையில் சுமார் 30 சதவீத வேலைவாய்ப்புகள் அடுத்த 5 வருடத்தில் மாயமாகும் என விக்ரம் பண்டிட் தெரிவித்துள்ளார்.
சிட்டிகுரூப் இன்க் நிறுவனம் பல்வேறு நிதிசிக்கலில் இருந்தபோது அதனை மீண்டும் வளர்ச்சி பாதைக்குக் கொண்டு வந்தவர் விக்ரம் பண்டிட். இவருடைய இந்தக் கணிப்பு வங்கித்துறை அதிகாரிகள் மத்தியில் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கி ஊழியர்கள்
செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் ஆகியவற்றின் உதவியுடன் வங்கியில் தினசரி பணியில் பேக் ஆபிஸ் வேலைகளில் ஈடுபடுவோரின் வேலையை முழுமையாக நீக்கிவிடும். இதன்படி அடுத்த 5 வருடத்தில் வங்கித்துறையில் 30 சதவீத வேலைவாய்ப்புகள் மாயமாகும் என விக்ரம் தெரிவித்துள்ளார்.
விக்ரம்
தற்போது விக்ரம் ஓரோஜென் குரூப் என்னும் முதலீடு நிறுவனத்தின் துணை நிறுவனராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். இதற்கு முன்னதாக அதாவது 2007-2012ஆம் ஆண்டுக் காலத்தில் சிட்டிகுரூப் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்தார்.
வால் ஸ்ட்ரீட்
அமெரிக்காவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தைத் தாண்டி மெஷின் லேர்னிங், கிளவுட் கம்பியூடிங் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. இதன் காரணமாகப் பல்வேறு நிறுவனங்கள் தங்களது பெரும்பாலான பணியை ஆட்டோமேட் செய்துள்ளது.
இதன் மூலம் ஊழியர்களை வெளியேற்றியும், புதிய வேலையைத் தேட வற்புறுத்தியும் வருகிறது.
பாங்க ஆஃப் அமெரிக்கா
சமீபத்தில் பாங்க ஆஃப் அமெரிக்காவின் தலைமை செயல் அதிகாரியான டாம் மான்டேங் கூறுகையில், ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கப் புதிய தொழில்நுட்ப உதவியை நாடி வருகிறோம் எனத் தெளிவான திட்டத்தை அறிவித்தார்.
இந்தியாவில்..
அமெரிக்காவில் ஏற்கனவே அதிகப்படியான பணிகள் ஆட்டோமேட் செய்யுப்பட்டுள்ள நிலையிலேயே 30 சதவீத வேலைவாய்ப்புகள் இழக்க நேரிடும் நிலையில், இந்திய வங்கிகளில் இன்று வரை பெரும்பாலான பணிகள் பேப்பர் வாயிலாக உள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் இதன் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் வங்கிகள்
இந்தியாவில் தனியார் வங்கிகள் தான் தற்போது அதிகளவிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில், தனியார் வங்கிகளில் கூடிய விரைவில் அதிகப்படியான ஆட்குறைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் எனவும் கணிப்புகள் கூறுகிறது.
ஐடி துறை..
ஆட்டோமேஷன் பிரச்சனை ஐடி துறையை அடுத்தத் தற்போது வங்கித்துறையிலும் நுழைந்துள்ளது.
புதிய பேமெண்ட் வங்கி
புல்லட் ரயில்
எப்படி..?
உஷாரான இந்தியர்கள்
ஆற்று மணல்
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications