ஆதார் கார்டை இந்த 4 விஷயத்தில் கண்டிப்பாக இணைக்க வேண்டும்..!

சில மாதங்களாக ஆதார் கார்டினை பலவற்றில் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவிப்புகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. அதற்கான கடைசி நாட்களும் அறிவிக்கப்படுகின்றன.

எனவே வருகின்ற 2018 அண்டு வரை ஆதார் கார்டினை பல முக்கிய இடங்களில் ஆதார் கார்டினை இணைக்க வேண்டும். அதில் சில முக்கியமான இணைப்பினை இங்குப் பார்க்கலாம்.

ஆதார் பான் இணைப்பு

ஆதார் பான் இணைப்பு

2017 ஜூலை 1-க்கு பிறகு வருமான வரி தாக்கல் செய்யும் அனைவருக்கும் ஆதார் மற்றும் பான் இணைப்புக் கட்டாயம் ஆகும். தற்போது இந்த இணைப்பிற்குக் கடை நாளை 2017 டிசம்பர் 31-ம் தேதிக்குள் செய்ய வேண்டும்.

ஆனால் ஆதார் பான் கார்டு இணைப்பு என்ற அறிவிப்பு வருமான வரி தாக்கல் செய்யாபவர்களுக்கு மட்டுமே கட்டாயம் ஆகும். தனிநபர் ஒருவரின் வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வரும் போது வருமான வரி செலுத்த வேண்டும்.

 

வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு

வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு

வங்கி கணக்கு, பங்கு சந்தை, மியூச்சுவல் ஃபண்டு, தேசிய ஓய்வூதிய கணக்கு போன்றவற்றில் ஆதார் எண்ணை 2017 டிசம்பர் மாதத்திற்குள் இணைக்க வேண்டும்.

அன்மை காலங்களில் ஆதார் கார்டு இல்லாமல் வங்கி கணக்கை துவங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 ஆதார் - மொபைல் எண் இணைப்பு

ஆதார் - மொபைல் எண் இணைப்பு

2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை அடுத்து மார்ச் மாதம் தொலைத்தொடர்பு துறை மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் மொபைல் எண் வாங்கும் போது போது ஆதார் கார்டு கட்டாயம் என்று அறிவித்தது.

ஏற்கனவே மொபைல் எண் வாங்கிப் பயன்படுத்தி வரும் சந்தாதார்கள் 2018 பிப்ரவரி 6-க்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். மொபைல் எண்ணுடன் ஆதார் இணைப்பைச் செய்யவில்லை என்றால் இணைப்புத் துண்டிக்கப்படும்.

 

பொது விநியோக திட்டம்

பொது விநியோக திட்டம்

அன்மையில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பொது விநியோக திட்டம் மற்றும் மக்கள் பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளிட்டவற்றில் ஆதார் எண் இணைப்பினை செய்ய 2017 டிசம்பர் 31 வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. முன்பு இதற்கான காலக்கெடு 2017 செப்டம்பர் 30-க்குள் செய்ய வேண்டும் என்று இருந்தது.

மத்திய அரசின் பல மானிய திட்டங்கள் ஆதார் இல்லாமல் தற்போதைக்குப் பெற முடியாது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+