நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்ந்தாலும் இல்லை என்றாலும் மணல் விலை உயர்ந்துகொண்டே தான் செல்கின்றது. இதற்கு முக்கியக் காரணம் வளர்ந்து வரும் மக்கள் தொகையினால் அதிகரித்து வரும் தேவை என்பது ஆகும்.
மணல் தேவை உள்ள அளவிற்கு இருப்பு இல்லை என்பது முக்கியமான ஒன்று. இதனை உறுதி செய்யும் வகையில் மிகப் பெரிய பாலைவனங்களைக் கொண்ட அரபு நாடுகள் கூட இப்போது மணல் இறக்குமதியைச் செய்யத் துவங்கியுள்ளனர்.
எனவே கண்மூடித் தனமாக மணலைப் பயன்படுத்துவதற்கு முன்பு இந்தக் கட்டுரையினைப் படியுங்கள்.
விருப்பத் தேர்வில் பாலைவனங்கள் இல்லை
கட்டுமான தொழிலுக்குப் பயன்படுத்தும் பெறும் பகுதியான மணல் ஆறுகளில் இருந்தும் கடலில் இருந்து மட்டுமே எடுத்துப் பயன்படுத்தப்படுகின்றது. பாலைவனத்தில் உள்ள மணல் மிகவும் மென்மையாக இருப்பதனால் பயன்படுத்துவது இல்லை.
மண்ணின் முக்கியத்துவம்
கட்டுமான தொழிலுக்குப் பயன்படுத்தும் கான்கிரீட், செங் கற்கள், கண்ணாடி போன்றவை மணலால் உருவாகப்பட்டவையே ஆகும். எனவே தண்ணீருக்கு அடுத்து இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் இயற்கைப் பொருட்களில் மணல் இரண்டாம் இடத்தினைப் பிடித்துள்ளது.
பாலைவன நாடுகளுக்குக் கூட மணல் நெருக்கடி
துபாய் இப்போது ஆஸ்திரேலியாவிலிருந்து மணல் இறக்குமதியினைச் செய்கிறது, ஏனெனில் அதன் கடல் மணல் வலம் தீர்ந்துவிட்டது. 2014 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு எமிரேட் 456 மில்லியன் டாலர் மதிப்பிலான மணல், கல் மற்றும் சரளை இறக்குமதி செய்துள்ளது.
மணல்-சுரங்க அபாயமணி
மணல் ஆற்றின் கீழ் அடிப்பகுதியில் ஒரு நீர்த்தேக்கமாகவும், இயற்கையால் கட்டமைக்கப்பட்ட பாதுகாப்பு கம்பளமாகவும் இருக்கின்றது.
மணல் எடுப்பதினால் ஆற்றின் அருகில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் அளவுக் குறைந்து தண்ணீர் பஞ்சம் ஏற்படுகின்றது. மேலும் இது வாழ்விடம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை உருவாக்குகிறது.
உலகளவிலான அச்சுறுத்தல்
சீனாவில் மிகப் பெரிய நல்ல தண்ணீர் உள்ள போயாங் ஏரியில் தொடர்ந்து மணம் எடுத்து வந்ததை அடுத்துத் தற்போது முழுவதும் வறண்டு காணப்படுகின்றது.
கென்யா ஆற்றில் இருந்து மணல் எடுத்துத் தற்போது குடிக்கக் கூடத் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றது.
மொராக்கோ மற்றும் கரிபியன் தீவுகளில் மணல் முழுமையாக எடுக்கப்பட்டதால் கடுமையான வானிலைக்கு இடையூறுகளைச் சந்தித்து வருகின்றன.
இந்தியாவில் சிக்கல்
கேரளாவில் பம்பா, மனிமலா மற்றும் அச்சன்கோவில் ஆகிய ஆறுகளில் மணல் எடுத்ததினால் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தினை அடுத்துத் தற்போது மாநிலம் முழுவதும் ஆறுகளில் இருந்து மணல் எடுப்பது தடை செய்யப்பட்டுத் தமிழ் நாட்டில் இருந்து மணல் கொண்டு செல்லப்படுகின்றது.
கடல் பகுதி மணல் எடுப்பதினால் உள்ள அபாயங்கள்
கடல் பகுதியில் இருந்து மணல் எடுக்கும் போது மீன் ஆதாரம் பாதிக்கப்படும், மீன் பிடித்தல் அழிந்து விடும், பவளப்பாறைகள் அழிந்துவிடும், முதலை வகைகள் அழிந்துவிடும். இதுபோன்ற ஆபத்துகளை இந்தியாவும் சந்தித்து வருகின்றது.
தமிழகத்தில் உள்ள பாதிப்பு
வட தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து ஆற்று மணல் எடுத்துத் தற்போது கோடைக்காலங்கள் மக்கள் தண்ணீருக்காகத் திண்டாடி வருகின்றனர். இதே சூழல் காவிரி, தமிரபரனி போன்ற ஆற்றுப் பகுதிகளிலும் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகின்றது. எனவே முன்னெச்சரிக்கையாக மணல் எடுப்பதைக் குறைத்து மாற்று வழியைச் சிந்திப்பதே நல்லது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
குறிப்பு
உலக நாடுகள் மணல் எடுத்ததினால் பல சிக்கல்களைச் சந்தித்து வரும் நிலையில் இந்திய அரசு அமெரிக்கா, அரபு நாடுகள், இங்கிலாந்து பொன்ற நாடுகளுக்கு மணல் ஏற்றுமதியைத் தொடர்ந்து செய்து வருவது மட்டும் இல்லாமல் இறக்குமதியும் செய்து வருகின்றது.
புதிய பேமெண்ட் வங்கி
புல்லட் ரயில்
எப்படி..?
உஷாரான இந்தியர்கள்
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications