ஆசியா பொருளாதாரத்தில் 2வது மற்றும் 3வது இடத்தில் இருக்கும் ஜப்பான் மற்றும் இந்தியா மத்தியிலான நட்புறவு மிகவும் வலிமையானது. இதனை உண்மையாக்கும் வகையில் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்திற்கு ஜப்பான் 88,000 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தது, இதன் அடிக்கல்நாட்டு விழா சிறப்பாக முடிந்தது.
ஆனால் கடந்த சில வருடங்களாக இந்தியா மற்றும் ஜப்பான் மத்தியிலான வர்த்தகம் மிகவும் மோசமான நிலையை அடிந்து வருகிறது.
ஏற்றுமதி..
கடந்த 4 வருடத்தில் ஜப்பான் நாட்டிற்கு இந்தியா செய்யும் ஏற்றுமதியின் அளவு பாதியாகக் குறைந்து வர்த்தகச் சந்தைக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
2013-14ஆம் நிதியாண்டில் இரு நாடுகளுக்கு மத்தியிலான ஏற்றுமதியின் மதிப்பு 6.81 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2016-17ஆம் நிதியாண்டில் இது 3.85 பில்லியன் டாலர் என்ற மோசமான நிலையை அடைந்துள்ளது.
வர்த்தகப் பற்றாக்குறை
இதன் மூலம் இரு நாடுகளுக்கும் மத்தியிலான வர்த்தகப் பற்றாக்குறை தற்போது 5.9 பில்லியன் டாலராக உயர்ந்து.
அதாவது ஏற்றுமதியை விடவும் 5.9 பில்லியன் டாலர் அளவிற்கு அதிகமான இந்தியா அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறது என்பது இதன் பொருள்.
CEPA ஒப்பந்தம்
பிப்ரவரி 2011ஆம் ஆண்டு ஜப்பான் மற்றும் இந்தியா விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஆகஸ்ட் 2011ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் மத்தியிலான சரக்கு மற்றும் சேவை வர்த்தகம் எளிமைப்படுத்தப்படும் என நம்பப்பட்ட நிலையில்.
கடந்த 5 நிதியாண்டுகளில் 4 ஆண்டுகளில் ஏற்றுமதி அளவு குறைவாகவே இருந்துள்ளது.
முக்கியப் பொருட்கள்
பெட்ரோலியம் பொருட்கள், கெமிக்கல் பொருட்கள், மீன் மற்றும் மீன் உணவுகள், ஆடைகள், இரும்பு மற்றும் ஸ்டீல் பொருட்கள், டெக்ஸ்டைல்ஸ், யான் மற்றும் பேப்ரிக்ஸ, விலங்குகளுக்கான உணவுகளைத் தொடர்ந்து non-metallic mineral ware, metalliferous ores and scrap ஆகியவை ஜப்பான் நாட்டிற்கு இந்தியா அதிகளவில் ஏற்றுமதி செய்யும் பொருட்களாக


Click it and Unblock the Notifications