இந்தியாவில் இது தான் டாப்பு.. ஜியோ-க்கு என்ன ஆச்சு?

இந்தியாவின் 2-ம் ஆம் மிகப் பெரிய தனியார் வங்கி சேவையான எச்டிஎப்சி வங்கி இந்தியாவின் தலை சிறந்த பிராண்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அன்மையில் இந்தியாவின் டாப் பிராண்டுகள் பற்றிய ஆய்வினை நடத்திய தனியார் நிறுவனம் ஒன்று 1,20,000 பிராண்டுகளை ஆய்வது செய்து இந்த பட்டியலில் வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் வங்கிகள் மற்றும் டெலிகாம் நிறுவனங்கள் அதிகம் செலுத்தியுள்ளன. இரண்டாம் இடத்தினை ஏர்டெல் நிறுவனமும், மூன்றாம் இடத்தினை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் பெற்றுள்ளன. புதிய வரவாக இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள ஜியோ 11 வது இடத்தினை பெற்றுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சன் நெட்வொர்க் 27வது இடத்தினை பிடித்துள்ளது.

பண மதிப்பு நீக்கம்

பண மதிப்பு நீக்கம்

நரேந்திர மோடி அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பினை நீக்கிய பிறகு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல பிராண்டுகளின் மதிப்பு 2.4 சதவீதம் முதல் 4.2 சதவீதம் வரை சரிந்துள்ளது. ஆனால் 2017 மார்ச் மாதத்தின் போது 06 சதவீதமும், ஏப்ரல் மாதம் 3.9 சதவீதமும் பிராண்டுகள் பயன்படுத்துவது அதிகரித்தது.

பிற நாடுகள்

பிற நாடுகள்

இந்த ஆய்வைச் சீனா மற்றும் இந்தோநேஷியாவில் நடத்திய போது அங்கும் வங்கிகள் தான் முதல் இடத்தினை பிடித்தன. எனவே இந்தியாவில் உள்ள பிராண்டுகளின் டாப் 50 பட்டியலை இங்குப் பார்ப்போம்.

எச்டிஎப்சி வங்கி

எச்டிஎப்சி வங்கி

எச்டிஎப்சி வங்கி சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 24 சதவீதம் உயர்ந்து 17,965 மில்லியன் டாலர் பிராண்டு மதிப்புடன் முதல் இடத்தினை பிடித்துள்ளது.

ஏர்டெல்

ஏர்டெல்

இந்தியாவில் தலை சிறந்த தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் பிராண்டு மதிப்பு 3 சதவீதம் உயர்ந்து 10,233 மில்லியன் டாலர் பிராண்டு மதிப்புடன் இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிறுவனம் 31 சதவீதம் அதாவது 9,334 மில்லியன் டாலர் அளவில் பிராண்டு மதிப்பை உயர்த்தி மூன்றாவது இடத்தினை பிடித்துள்ளது.

ஏசியன் பெயின்ட்ஸ்

ஏசியன் பெயின்ட்ஸ்

ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம் 15 சதவீதம் மாற்றத்துடன் 4,717 மில்லியன் டாலர் மதிப்புடன் 4வது இடத்தினை பிடித்துள்ளது.

ஐசிஐசிஐ

ஐசிஐசிஐ

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ 19 சதவீதம் உயர்ந்து 4,697 மில்லியன் டாலர் மதிப்புடன் 5வது இடத்தினை பிடித்துள்ளது.

கோடாக் மகேந்திரா

கோடாக் மகேந்திரா

2016-ம் ஆண்டு 7 வது இடத்தில் இருந்த கோடாக் மகேந்திரா 36 சதவீதம் அதவடு 4,522 மில்லியன் டாலர் பிராண்டு மதிப்பைப் பெற்று 6வது இடத்தினை பிடித்துள்ளது.

மாருதி சூசிகி

மாருதி சூசிகி

இந்தியாவின் தலை சிறந்த ஆட்டோ மொபைல் நிறுவனமான மாருதி சென்ற ஆண்டை விட ஒரு இடம் முன்னேறி 4,449 மில்லியன் டாலர் மதிப்புடன் 7வது இடத்தினை பிடித்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இரண்டு இடங்கள் சரிந்து 3,564 மில்லியன் டாலர் பிராண்டு மதிப்புடன் 8வது இடத்தினை பிடித்துள்ளது.

ஹீரொ

ஹீரொ

ஹீரோ ஆட்டோ மொபைல் நிறுவனம் சென்ற ஆண்டு இருந்த அதே 9வது இடத்தினை 3,295 மில்லியன் டாலர் பிராண்டு மதிப்புடன் பிடித்துள்ளது.

ஆக்சிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கி பிராண்டு மதிப்பு 2 சதவீதம் அதாவது 2,429 டாலர்களாக உயர்ந்து 10வது இடத்தினை பிடித்துள்ளது.

முழுப் பட்டியல்

இந்தியாவின் டாப் 50 பிராண்டுகளின் முழுப் பட்டியல்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+