டெல்லி: இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்கா மட்டும் இல்லாமல் ஆஸ்திரேலியா, கனஃபா மற்றும் இன்னும் பிற நாடுகளில் தங்களது கிளைகளை வைத்துள்ளன.
அமெரிக்காவில் எப்படி இந்திய ஐடி நிறுவன ஊழியர்களுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றதோ அதேப்போன்று பிற நாடுகளில் கடினமான கட்டுப்பாடுகள் உள்ளன.
நாஸ்காம்
இதைப்பற்றிக் கண்டு அறிந்த நாஸ்காம் பல சிக்கல்களை நிறுவனங்களுக்கு விளக்கி வருகின்றது. அதுமட்டும் இல்லாமல் உலக வர்த்தக மையத்திடம் இந்தியாவுடன் அந்த நாடுகள் போட்டுள்ள ஒப்பந்தத்தினை மீறுவதாக உள்ளதாகவும் புகார் அளித்துள்ளது.
எனவே அமெரிக்காவை தவிர்த்து பிற நாடுகளில் இந்திய ஐடி நிறுவன ஊழியர்களுக்கு விசா பெற உள்ள சிக்கல்களைப் பற்றி இங்குச் சுருக்கமாகப் பார்ப்போம்.
சீனா
இந்திய ஐடி ஊழியர்கள் சீனாவில் உள்ள தங்களது கிளைகளில் வேலை செய்ய வேண்டும் என்றால் ஒரு முறை மட்டுமே அதுவும் குறைந்த கால அளவிற்கு விசா அளித்து அனுமதிக்கப்படுவார்கள்.
இந்தோனேசியா
15 நாட்களுக்கு மேலாகப் பணி செய்யப் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உள்நாட்டு ஊழியர்களை அதிகளவில் பணிக்குப் பயன்படுத்த வேண்டும்.
பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்ஸ் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது மூன்று மாதத்திற்கு வங்கி கணக்குள் 1.5 லட்சம் ரூபாய் வரை பணம் வைத்து இருக்க வேண்டும்.
மேலும் முறையான திருமண மற்றும் படிப்புச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆஸ்திரேலியா
457 விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது புதிய தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் 20 சதவீதம் வரை கூடுதல் சம்பளம் அளிக்க வேண்டும்.
அதிகபட்ச விசா காலம் 4 வருடத்தில் இருந்து 2 வருடமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்
இந்திய ஐடி நிறுவனங்களின் மூலம் விண்ணப்பிக்கும் போது விசா வழங்க அனுமதி மறுக்கப்படுகின்றது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications