ஆட்டோமொபைல் சந்தை நாளுக்கு நாள் தொடர்ந்து வளர்ந்து வருகிறது, சர்வதேச அளவுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் இதன் அளவு சற்று அதிகமாகவே உள்ளது.
இந்நிலையில் உலகளவில் சிறந்து விளங்கும் டாப் 15 ஆட்டோமொபைல் நிறுவனப் பங்குகள் பட்டியலில் மாருதி சுசூகி நிறுவனம் 2வது இடத்தைப் பெற்று அசத்தியுள்ளது.
2017ஆம் ஆண்டு
சர்வதேச நாடுகளில் இருக்கும் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களை ஒப்பிடுகையில் இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி நிறுவன பங்குகள் நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 53.32 சதவீதம் வரை வளர்ச்சி பெற்று 2வது இடத்தைப் பெற்றுள்ளது.
முதல் இடம்
உலகின் 15 சிறந்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கொண்ட இப்பட்டியலில் முதல் இடத்தில் சுமார் 70.20 சதவீத பங்கு மதிப்பு உயர்வுடன் அதிநவீன மற்றும் அதிவேக எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
புதிய உச்சம்
வியாழக்கிழமை வர்த்தகத்தில் மாருதி சுசூகி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 8,200 ரூபாய் என்ற புதிய உச்சத்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
38.49 பில்லியன் டாலர்
இப்பட்டியலில் இருக்கும் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மத்தியில் சந்தை மூலதன அளவீட்டில் 38.49 பில்லியன் டாலர் உடன் மாருதி சுசூகி 11வது இடத்தில் இருந்தாலும், பங்கு வளர்ச்சி அளவில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
போட்டி நிறுவனங்கள்
டெஸ்லா, மாருதி சுசூகி நிறுவனங்களுடன் இப்பட்டியலில் ஆடி, ரெனால்ட், சுபுரூ கார்ப், ஹூண்டாய் ஆகிய நிறுனங்களும் உள்ளது. இந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு மாருதி சுசூகி நிறுவனத்தை விடவும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலீடு
சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில், தற்போது டெஸ்லா நிறுவனம் விற்பனையிலும், வருவாயிலும் தொய்வை சந்திக்கும் காரணத்தால், மாருதி சுசூகி அதிகளவிலான ஈர்ப்பை பெற்றுள்ளது.
மும்பை பங்குச்சந்தையிலும் இந்த வருடம் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ள நிறுவனங்கள் பட்டியலிலும் மாருதி சுசூகி முன்னணி வகிக்கிறது.


Click it and Unblock the Notifications