ஜிஎஸ்டி வரி அமைப்பிற்குள் அதிகப்படியான நிறுவனங்களைக் கொண்டு வரும் நோக்கில், வருமான வரித்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் சோதனைகளையும் ஆய்வுகளையும் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த அதிரடி சோதனைகள் அடுத்த வாரம் முதல் துவங்கும் எனவும் வருமான வரித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி வரி அமைப்பு
இந்தச் சோதனையில் நிறுவனங்கள் வரி அமைப்பிற்குள் வர உண்மையிலேயே மறுக்கிறதா அல்லது ஜிஎஸ்டி அமைப்பிற்குள் வர ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய உள்ளது. இதற்காக நாடு முழுவதும் இருக்கும் நிறுவனங்களைச் சில முக்கியக் காரணிகளைக் கொண்டு குறிப்பிட்ட நிறுவனங்களை மட்டும் பட்டியலிட்டுள்ளது.
களத்தில் ஆய்வு
இந்த நிறுவனங்களில் நேரடியாகக் களத்தில் இறங்கி ஆய்வு செய்ய உள்ளது.
இதில் பல நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி அமைப்பிற்குள் கொண்டு வரப்படுவது மட்டும் அல்லாமல் ஏமாற்றும் நிறுவனங்களுக்கு இது ஒரு பாடமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திப்பு
கடந்த வாரம் வருமான வரித்துறையின் உயர் அதிகாரிகள் சில நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்தித்த பின்பு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
வகைப்படுத்தாத துறை
தற்போதைய நிலையில் வகைப்படுத்தாத துறை சார்ந்த நிறுவனங்கள் ஜிஎஸ்டிக்குள் வராமல் தப்பி வருகிறது. இதனை முறையாக வரி அமைப்பிற்குள் கொண்டு வரவே இந்தத் திட்டம் திட்டப்பட்டதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications