மும்பை: பதஞ்சலி என்ற பெயருக்கு இந்திய நுகர்வோர் சந்தையில் தனிச் சக்தி உள்ளது, குறிப்பாக இத்துறையில் இருக்கும் கார்பரேட் நிறுவனங்களுக்குப் பதஞ்சலி நிறுவனம் தற்போது மிகப்பெரிய போட்டியாக உள்ளது. இந்நிறுவனத்துடன் போட்டி போட்ட முடியாமல் வர்த்தகத்தையும், லாபத்தை இழந்து நிற்கும் கார்பரேட் நிறுவனங்கள் பல.
இந்நிலையில் பாபா ராம்தேவ் தலைமையிலான பதஞ்சலி நிறுவனம் புதிதாக இரண்டு பிரிவு வர்த்தகத்தில் இறங்க உள்ளது. இதுமட்டும் மட்டுமல்லாமல் தனது முடிவிலும் மிக உறுதியாக இருப்பதாக ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
ரெண்டு ரிலீஸ்
2018ஆம் நிதியாண்டிற்குள் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் நிறுவனம் டைய்ரி (பால் பொருட்கள்) மற்றும் ஆடை தயாரிப்புகளைச் சந்தையின் முழுமையான வர்த்தகத்திற்குக் கொண்டு வர உள்ளதாகத் தெரிவித்துள்ளார் பாபா ராம்தேவ்.
ஒரு பொருட்களைச் சந்தைக்குக் கொண்டு வருவதில் பல கட்டங்கள் உள்ளது. அனைத்தையும் இந்த நிதியாண்டிற்குள் செய்து முடிக்க உறுதியாக உள்ளது பதஞ்சலி நிறுவனம்.
11 பிரிவில்
டைய்ரி மற்றும் ஆடை பிரிவுகளில் தனது தயாரிப்புகளை அறிமுகம் செய்வதன் மூலம் பதஞ்சலி சுமார் 11 பிரிவுகளில் பொருட்களைத் தயாரித்து, விற்பனை செய்யும்.
20 லட்சம் கோடி
இந்தியாவில் இவ்விரண்டு பிரிவின் வர்த்தகம் சந்தை மட்டும் சுமார் 20 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. இப்பிரிவின் வர்த்தகத்தில் 2018ஆம் நிதியாண்டுக்குள் பதஞ்சலி நிறுவனம் இடம்பெறும் Globoil India 2017 என்ற சமையல் எண்ணெய் குறித்த மாநாட்டில் ராம்தேவ் கலந்துகொண்டு தனது திட்டத்தைத் தெரிவித்தார்.
நம்பிக்கை.. முதல் இடம்..
தற்போது சந்தையில் நம்பிக்கையான நிறுவனங்களில் முதல் இடத்தில் இருக்கும் பதஞ்சலி, இந்த வருடம் மொத்த வருமானத்தில் முதல் இடம்பிடிக்கும்.
மொத்த வருமானத்தை வைத்துப் பார்க்கும்போது இந்தியாவில் பல நிறுவனங்களைப் பதஞ்சலி கீழ் தள்ளி முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது. அதில் மீதமுள்ள ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் மட்டும் தான் மீதமுள்ளது.
பன்னாட்டு நிறுவனங்கள்
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பேசி ராம்தேவ், பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு என்ன செய்தது. ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஹிந்துஸ்தானுக்கு (இந்தியாவிற்கு) என்ன செய்தது..? கோல்கேட் எந்தக் கதவை திறந்தது..? நெஸ்லே என்ன செய்தது. எனப் பன்னாட்டு நிறுவனங்களைக் குறித்துத் தாக்கினார் ராம்தேவ்.
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
லக்ஸ், சர்ப் எக்சல், பேர் அண்ட் லவ்லி மற்றும் கிஸான் பிராண்டுகளை வைத்திருக்கும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் 2017ஆம் நிதியாண்டில் சுமார் 34,487 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றது. இது நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் FMGC நிறுவனமாகும்.
பதஞ்சலி
இந்நிலையில் பதஞ்சலி நிறுவனம் 2017ஆம் நிதியாண்டில் 10,561 கோடி ரூபாயை வருமானமாகப் பெற்றது. 2018ஆம் ஆண்டில் இதன் அளவு 25,000 கோடி ரூபாய் வரை உயரும் எனக் கணிக்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications