பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல், ரிலையனஸ் ஜியோவின் சேவை பயன்பாட்டிற்கு வந்ததை அடுத்து தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாகப் பல ஆஃபர்களை அளித்து வருகின்றது.
இதன் அடுத்தக் கட்டமாக ஜியோ நிறுவனம் வெளியிட இருக்கும் பியூச்சர் போன்களுக்குப் போட்டியாக இந்திய நிறுவங்களான லாவா மற்றும் மைக்ரோமேஸ் உடன் இணைந்து 2,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் பண்டில் ஆஃபர்களுடன் போன்களை வெளியிட பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளது.
அக்டோபர் முதல்
போனை வாங்கி விற்பனை செய்வதை விடப் பிற பிராண்டுகளுடன் இணைந்து பண்டில் ஆஃபர்களுடன் வாடிக்கையாளர்களைக் கவர முடிவு செய்துளதாகவும், அதுவும் இன்னும் ஒரு மாதத்தில் இந்தப் போனை வெளியிட இருப்பதாகவும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் அணுபம் ஸ்ரீவஸ்தா குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குத் தெரிவித்தார்.
இணை-பிராண்டு
போன் தயாரிப்பதில் மைக்ரோமேக்ஸ் மற்றும் லாவா உடன் சேர்ந்து இணை பிராண்டாக, பண்டில் ஆஃபர் மற்றும் பிற சலுகைகளுடன் வெளியிட இருப்பதைப் பிஎஸ்என்எல் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
2,000 ரூபாய்
இலவச குரல் அழைப்பு சேவையுடன் 2,000 ரூபாய்க்கும் குறைவாகவே போனை வெளியிட இருப்பதாகக் கூறி இருப்பது ஜியோவில் 1,500 ரூபாய் போனுக்குப் போட்டியாக உள்ளதாகவே வல்லுனர்கள் கூறுகின்றனர்.
முதலீடு
பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தத் திட்டத்திற்காக எவ்வளவு முதலீடு செய்யப்போவதில்லை என்பதைத் தெரிவிக்கவில்லை. ஆனால் புற நகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள தங்களது 10.5 கோடி வாடிக்கையாளர்களைக் கவரவே பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளது என்று கூறப்படுகின்றது.
வாடிக்கையாளர்கள்
2016-2017 நிதி ஆண்டில் மட்டும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 2.5 கோடி வாடிக்கையாளர்கள் புதியதாக இணைந்துள்ளதாகவும், 7.5 லட்சம் நபர்கள் மொபைல் எண் போர்ட்டபிளிட்டி சேவை மூலம் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனவே இந்த 2000 ரூபாய் மூலம் மேலும் வாடிக்கையாளர்களைப் பிஎஸ்என்எல் கவரும் என்பதில் ஐயம் இல்லை.
போன் நிறுவனங்கள்
மைக்ரோமேக்ஸ் மற்றும் லாவா நிறுவனங்கள் சீன நிறுவனங்களான ஓப்போ, விவோ, சியோமி மற்றும் ஜியோனி போன்றவற்றுடன் போட்டி போட முடியாமல் சந்தையினை இழந்து வரும் நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணையும் போது சந்தையில் ஒரு நிலையான இடத்தினைப் பிடிக்க முடியும் என்று நினைக்கின்றன.
ஆனால் இது குறித்து லாவா மற்றும் மைக்ரோமேஸ் நிறுவன செய்தி தொடர்பாளர்களிடம் கேட்டபோது அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
சந்தை சரிவு
இரண்டு வருடங்களுக்கு முன்பு மைக்ரோமேக்ஸ, கார்பன், லாவா மற்றும் இண்டெக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் 60 சதவீத மொபைல் போன் சந்தையினை வைத்து இருந்தனர் தற்போது அது 50 சதவீதத்திற்கும் கீழாகச் சரிந்துள்ளது என்று அன்மை ஆய்வு கூறுகின்றது.
ஜியோ
ஜியோ நிறுவனம் ஏற்கனவே ஆகஸ்ட்
மாதம் முதல் 1,500 ரூபாய் செக்யூரிட்டி டெபாசிட்டாகப் பெற்றுக்கொண்டு விற்பதாக அறிவித்த ஜியோ பியூச்சர் போன் விற்பனைக்கான முன் பதிவை 500 ரூபாயுடன் துவங்கி எதிர்பார்க்காத வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஐடியா மற்றும் ஏர்டெல்
விரைவில் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்களும் 2,500 ரூபாய்க்கு 4ஜி ஸ்மார்ட்போன் வெளியிடும் திட்டத்தில் உள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications