இந்தியாவில் மிகப்பெரிய போக்குவரத்தாக இருக்கும் ரயில்வே துறை பல மாற்றங்களைக் கண்டு புதிய உச்சத்திற்குச் சென்று கொண்டு இருக்கும் இந்தச் சூழ்நிலையில் புதிய மையில்கல்லாக ஜப்பான் நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவியுடன் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த 9 வருடத்தில் இந்திய ரயில்வே துறையில் ஊழியர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்துள்ளது.

மார்ச் 31, 2007ஆம் ஆண்டுக் கணக்கீட்டில் இந்திய ரயில்வே துறையில் சுமார் 14,06,430 ஊழியர்கள் பணியாற்றிய நிலையில் 9 வருடத்திற்குப் பின் இதன் எணிக்கை சுமார் 9.79 சதவீதம் குறைந்துள்ளது.
2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கணக்கிட்ட போது இதன் அளவு 12,68,738 இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேக்காலக்கட்டத்தில் புதிய ரயில் நிலையங்களின் எண்ணிக்கை 4.44 சதவீதம் அதிகரித்துள்ளது, ஆயினும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் சற்று வருத்தத்தை அளிக்கிறது.
மார்ச் 2007ஆம் ஆண்டு இந்திய ரயில்வே துறையில் சுமார் 6,909 ரயில் நிலையங்கள் இருந்தது. இதுவே 2016 மார்ச் மாதத்தில் 4.44 சதவீதம் உயர்ந்து 7,216ஆக அதிகரித்துக் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications