பெங்களுரூ: இன்போசிஸ் நிறுவனத்தில் விஷால் சிக்கா சிஇஓவாக நியமனம் செய்யும் முன்னும் சரி, சிஇஓ பதவியை ராஜினாமா செய்யப்பட்ட பின்னும் சரி, இந்நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகம் தலைகீழாக மாறுகிறது.
விஷால் சிக்கா முன்பு பணியாற்றிய எஸ்ஏபி நிறுவனத்தில் இருந்து சேர்க்கப்பட்ட பல அதிகாரிகள் இன்போசிஸ் நிறுவன உயர் பதவிகளில் உள்ளனர். விஷால் சிக்கா ராஜினாமாவை அறிவித்த பின்பு, இவர்களின் நிலை கேள்விக்குறியாகவே இருந்த நிலையில், தற்போது முக்கிய அதிகாரி ஒருவர் வெளியேறியுள்ளார்.
எஸ்ஏபி நிறுவனத்தில் இருந்து சேர்க்கப்பட்ட அனைவரும் இன்போசிஸ் நிர்வாகத்தின் உயர் பதவியில் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சஞ்சய் ராஜகோபாலன்
சிக்கா தனது ராஜினாமாவை அறிவித்த பின்பு சிக்காவின் மனைவி உட்பட இந்நிறுவனத்தில் இருந்து பல உயர் அதிகாரிகள் வெளியேறினர். இவர்களது வரிசையில் தற்போது சஞ்சய் ராஜகோபாலன் அவர்களும் சேர்ந்துள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் டிசைன் பிரிவின் தலைவராக இருந்த சஞ்சய் ராஜகோபாலன் தனது பணியை ராஜினாமா செய்துள்ளதாக லிங்கிடுஇன் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
எஸ்ஏபி நிறுவனம்
சஞ்சய் ராஜகோபாலனும், ஜெர்மன் மென்பொருள் நிறுவனமான எஸ்ஏபி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டு இருக்கும் போது சிக்கா இவரை இன்போசிஸ் நிறுவனத்திற்கு அழைத்து வந்தார்.
முதல் அதிகாரி..
தற்போது சஞ்சய் ராஜகோபாலனின் லிங்கிடுஇன் தளத்தில் தான் ஒரு ப்ரீ மேன் என்று அறிவித்துள்ளார்.
சிக்கா இன்போசிஸ் நிறுவனத்தில் சேர்ந்த உடன் எஸ்ஏபி நிறுவனத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட சஞ்சய் ராஜகோபாலன் சிக்காவின் ராஜினாமாவிற்குப் பின் வெளியேறும் முதல் எஸ்ஏபி முன்னாள் உயர் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
பிற உயர் அதிகாரிகள்
சஞ்சய் ராஜகோபாலனுக்கு முன்பு, இன்போசிஸ் நிறுவனத்தின் வென்சர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரிவின் தலைவர் யூசப் பஷர் மற்றும் நிறுவனத்தின் பெரிய டீல்களைக் கையாளும் பொறுப்பில் இருந்த ரித்திக்கா சூரி ஆகியோர் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் வெளியேறிய முக்கிய ஆதிகாரிகள் ஆகும்.
அதிகரிக்கும்...
இந்நிலையில் ஆய்வாளர்கள் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து மேலும் பல உயர் அதிகாரிகள் வெளியேறுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இதன் இன்போசிஸ் உயர் அதிகாரிகள் வெளியேற்றத்தின் சீசன் 2 விரைவில்
துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications