இந்தியாவில் ஆன்லைன் டாக்ஸி நிறுவனங்களின் சேவையும் வர்த்தகமும் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில், இந்நிறுவனங்களில் பணியாற்றும் ஓட்டுநர்கள் தொடர்ந்து புதுப்புது பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர்.
ஓலா மற்றும் உபர் நிறுவனத்தின் பணியாற்றும் ஓட்டுநர்களின் மாத வருமானம் எப்போதும் இல்லாத வகையில் இந்த வருடம் 33 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.
ஓலா, உபர்
இந்தியாவில் ஆன்லைன் டாக்ஸி சேவையில் ஆதிக்கம் செலுத்தும் ஓலா மற்றும் உபர் நிறுவனங்கள் ஓட்டுநர்களுக்கு அளிக்கும் சலுகைகள், செலவினங்களை அதிகளவில் குறைத்துள்ள காரணத்தால், கடந்த வருடம் ஓட்டுநர்கள் பெற்ற சராசரி வருமானத்தை விடவும் சுமார் 33 சதவீதம் குறைவான வருமானத்தைத் தற்போது பெறுகின்றனர்.
33 சதவீதம் குறைவு..
2016ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் ஓலா, உபர் நிறுவனங்கள் ஓட்டுநர்கள் 31,000 முதல் 32,000 ரூபாய் வரையில் ஒவ்வொரு மாதமும் வருமானத்தைப் பெற்று வந்த நிலையில், 2017ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இதன் அளவீடுகள் சுமார் 33 சதவீதம் வரை குறைந்து 21,000 ரூபாய் மட்டுமே பெறுகின்றனர்.
மானியம்..
கடந்த சில வருடங்களில் ஓலா, உபர் ஆகிய இரண்டு நிறுவனங்களிலும் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. ஆனால் ஓட்டுநர்களுக்கு அளிக்கப்படும் மானியத்தின் அளவுகள் சுமார் 60 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ள காரணத்தால் ஓட்டுநர்கள் தற்போது அதிகளவிலான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.
காரணம்..
ஓட்டுநர்களுக்கு அளிக்கப்படும் மானியம் மற்றும் வருமானத்தைக் குறைத்ததன் மூலம் ஓலா, உபர் நிறுவனங்கள் தங்களது லாப கணக்குகளை அதிகமாகக் காட்ட முடிவு செய்துள்ளது.
சேமிப்பு
ஓலா, உபர் நிறுவனங்களின் திடீர் சலுகைகள் குறைப்பால் வருடத்திற்கு 20 மில்லியன் டாலர் முதல் 30 மில்லியன் டாலர் வரையில் சேமிக்க முடிகிறது. இதனை அடிப்படையாக வைத்தே தற்போது ஆன்லைன் டாக்ஸி நிறுவனங்கள் ஓட்டுநர்களை வாட்டி வதைக்கிறது.
கட்டணங்கள்
அதேபோல் வாடிக்கையாளர்கள் பக்கம் பார்க்கும் போது, கடந்த வருடத்தை விடத் தற்போது ஓலா, உபர் நிறுவனங்களில் கட்டணங்கள் சுமார் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இருந்தபோதும் ஓட்டுநர்களின் மானியத்தைக் குறைத்துள்ளது.
கார்பரேட் நிறுவனங்கள்
வர்த்தகத்தைத் துவங்கும்போது பல விதமான சலுகைகளை அளித்து, ஆஸ்தான ஆட்டோ மற்றும் இதர போக்குவரத்தை பாதித்த ஆன்லைன் டாக்ஸி நிறுவனங்கள் தற்போது வாடிக்கையாளர்களை மட்டும் அல்லாமல் ஓட்டுநர்களையும் வாட்டிவதைக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications