நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு உடனடியாக வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்ப, அருகில் உள்ள காப்பி ஷாப்பில் பணம் செலுத்த இந்திய தேசிய கொடுப்பனவுகள் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் யூபிஐ சேவையில் இணைந்து 2017 செப்டம்பர் 18 முதல் கூகுள் புதிதாகத் துவங்கியுள்ள சேவையே 'தேஜ்' ஆகும்.
கூகுள் தேஜ் செயலியில் தற்போது உள்ள அம்சங்கள், பிறகு வர இருக்கின்ற அம்சங்கள், எப்படிப் பயன்படுத்துவது போன்ற விவரங்களை இங்குப் பார்ப்போம்.
டாப் அம்சங்கள்
யூபிஐ உதவியுடன் வங்கி கணக்கை தேஜ் செயலியில் இணைப்பதன் மூலம் உடனடியாக, நேரடியாக வங்கி கணக்கிற்குப் பணம் அனுப்பலாம். கூகுள் நிறுவனத்தின் 24 மணி நேரப் பல அடுக்குப் பாதுகாப்பு போன்றவை தேஜ் செயலிக்கு அளிக்கப்பட்டுள்ளதால் பயம் இல்லாமல் சிறிய மற்றும் பெரிய தொகை என்று பாராமல் பணம் அனுப்பலாம் மற்றும் செலுத்தலாம்.
பிற யூபிஐ செயலிகள் போன்று இல்லாமல் அருகில் உள்ள நண்பர்களின் மொபைல் எண், வங்கி கணக்கு விவரங்கள் ஏதும் இல்லாமல் பகிர்தல் சேவை மூலமாகவும் பணத்தினைப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.
விரைவில் வர இருக்கின்ற அம்சங்கள்
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலமாகப் பணம் செலுத்துவது மற்றும் போன் பில் மற்றும் டிடிஎச் கட்டணம் போன்றவற்றைச் செலுத்த நினைவூட்டல் வைத்துக்கொள்ளக் கூடிய சேவைகளை விரைவில் அளிக்க முடிவு செய்துள்ளது.
வங்கி கணக்கில் இருந்து பணம் செலுத்துதல் மற்றும் பெறுதல்
உங்கள் வங்கி கணக்குடன் இணைந்து தேஜ் செயலி இயங்குவதால் பாதுகாப்பான பரிவர்த்தனை அளிக்கப்படும். அதே நேரம் வங்கிகள் அளிக்கும் வட்டியில் பாதிப்பை ஏற்படுத்தாது. இதுவே பேடிஎம் போன்ற செயலிகள் என்றால் வாலெட்டில் பணத்தினை ஏற்றிய பிறகே பணப் பரிமாற்ற செய்ய முடியும். தேஜ் செயலிக்காகத் தனியாக எந்தக் கணக்கை திறக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
நண்பர்களுக்கு அல்லது உறவினர்களுக்குப் பணம் அனுப்புதல்
தேஜ் செயலியினைப் பயன்படுத்தி உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு 24 மணி நேரமும் வங்கி கணக்கில் இருந்து பணத்தினை அனுப்ப முடியும். இதற்கு அவர்களது வங்கி கணக்கில் யூபிஐ சேவை இருக்க வேண்டும், அவர்களின் யூபிஐ ஐடி உங்களிடம் இருக்க வேண்டும்.
பல அடுக்கப் பாதுகாப்பு
தேஜ் செயலி கூகுள் நிறுவனத்தில் நேரடி 24 மணி நேர கண்காணிப்பில் இருக்கும். இதனால் மோசடிகள், ஹேக்கிங் போன்றவற்றைச் செய்ய முடியாது. யூபிஐ பின் மட்டும் இல்லாமல் கூகுள் பின் அல்லது கைவிரல்ரேகை அளித்தால் மட்டுமே பணம் பரிமாற்றம் செய்ய முடியும்.
அருகில் உள்ளவர்களுக்குப் பணம் அனுப்புதல்
உங்களது மொபைல் எண் போன்ற எந்த ஒரு தனிநபர் விவரங்களையும் பகிராமல் அருகில் உள்ள நபர்களுக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்றால் எளிதாகப் பணம் அனுப்ப முடியும்.
தமிழ் மொழியில் பயன்படுத்தலாம்
இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்ட செயலி என்பதால் பல முக்கிய வங்கிகளுடன் தங்களது சேவையினைத் தேஜ் இணைத்துக்கொண்டு உள்ளது. மேலும் இந்தச் செயலி தமிழ் மட்டும் இல்லாமல் ஆங்கிலம், இந்தி, பெங்காலி, குஜராத்தி, கனடா, மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பயன்படுத்த முடியும்.
செயலி பயன்படுத்த என்ன தேவை
ஆண்டிராய்டு செயலி என்பதால் இதனைப் பயன்படுத்த ஆண்டிராய்டு போன், இந்தியாவில் ஏதேனும் வங்கிகளில் கணக்கு, இந்திய மொபைல் எண் உள்ளிட்டவை தேவை ஆகும்.
வெகுமதிகள் அல்லது சலுகைகள்
தேஜ் செயலியின் ஸ்காட்ச் கார்டு வழியாகச் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 1,000 ரூபாய் வரை பணத்தினை வெல்ல முடியும். இதுவே ஞயிற்றுக் கிழமைகள் என்றால் 1 லட்சம் ரூபாய் வரை வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications