செயல்படாத கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான விஜய் மல்லையாவின் சொத்துக்களைப் பரிமுதல் செய்வதற்கான பணியில் அமலாக்கத் துறையின் சிறப்புக் குழு இயங்கி வருகின்றது.
முறைகேடாக 9,000 கோடி ரூபாய் கடனை இந்திய பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் இருந்து பெற்று ஏமாற்றிய வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள விஜய் மல்லையா இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
கைது நடவடிக்கை
விஜய் மல்லையாவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஒரு புறம் நடைபெற்று வரும் நிலையில் அவருடைய சொத்துக்களைப் பரிமுதல் செய்து ஏலம் விடும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது.
100 கோடி மதிப்பிலான பங்குகள்
யுனைடெட் ப்ரூவரிஸ் லிமிடெட் (யூபிஎல்) நிறுவனத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விஜய் மல்லையாவுக்கு உள்ள 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை மத்திய அரசின் ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்-க்கு மாற்றப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறையின் கோரிக்கை
அமலாக்கத் துறை ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடம் யுனைடெட் ப்ரூவரிஸ் லிமிடெட் மற்றும் மெடொவல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் உள்ள 4,000 கோடிகள் மதிப்பிலான பங்குகளை அரசுக்கு மாற்ற வேண்டும் என்று நிறுவன சட்டம் பிரிவு 9-ன் கீழ் கோரிக்கை வைத்து இருந்தது. அதன் முதற்கட்டமாக இந்தப் பரிவர்த்தனை நடந்துள்ளது.
செபி போட்ட தடை
பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் மேலாளராகவோ இயக்குநராகவோ விஜய் மல்லையா பதவி வகிப்பதைச் செபி தடை செய்ததை அடுத்து யுனைடெட் ப்ரூவரிஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் பதவியில் இருந்து ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டார்.
அரசுக்குச் சாதகமான சட்டம்
ஒரு குற்றவாளி இறந்துவிட்டால் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பணமோசடி சட்டம் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைமானம் வைத்திருந்த சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்காகச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட முடியும்.
உத்தரவு
சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான உத்தரவை தற்போது நீதிமன்றம் அளித்துள்ள நிலையில் அமலாக்கத் துறையினால் எளிதாக மத்திய அரசுக்கு இந்தப் பரிவர்தனை செய்ய முடிந்துள்ளது.
வங்கிளில் கடன்
ஐடிபிஐ வங்கி, எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க், யூகோ பாங்க், கார்ப்பரேஷன் பாங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி மற்றும் பிற நிதி நிறுவனங்களிடம் இருந்து நட்டத்தில் இயங்கி வந்த கிங்பிஷர் ஏர் லைன்ஸ் நிறுவனத்தின் மீது 9,000 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்துள்ளார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications