பெங்களூருவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் கன்சல்டண்ட்டாக பணிபுரிபவர் மகேஷ். இவருக்கு பெங்களூருவில் நிரந்தர வருமானம் உள்ளதால் இங்கேயே வாழ வேண்டும் என்று முடிவு செய்ததுடன் வீடு ஒன்று வாங்க வேண்டும் என்பதையும் கனவாக கொண்டுள்ளார்.
இது இவர் வாங்கும் சம்பளத்திற்கு மிகப் பெரிய திட்டம் என்பது அவருக்குத் தெரியும். எனவே இவர் அதற்காக எப்படி தயார் ஆக வேண்டும்.
(இது மகேஷ்ற்கானது மட்டுமல்லா சொந்த வீடு வாங்க வேண்டும் என்று கனவுடைய அனைவருக்குமானது)
செலவு மற்றும் சேமிப்பு
மகேஷ் தனது நீண்ட கால முதலீட்டைச் செய்து வீடு வாங்கத் தயார் ஆகிவிட்டார். எனவே உடனடியாக அவர் செலவு செய்வது மற்றும் சேமிப்பு பழக்கங்களை மாற்றி அமைக்க வேண்டும்.
சேமிப்பு பழக்கத்தை மற்றும் செலவு செய்வதை தனக்கு ஏற்றவாறு மாற்ற வீடு வாங்க எவ்வளவு செய்யப் போகின்றோம் என்று அவர் முடிவு செய்ய வேண்டும். இது அவரால் எவ்வளவு ஈஎம்ஐ கட்ட முடியும் என்பதைத் தேர்வு செய்ய உதவும்.
குடும்ப செலவுகள்
வீட்டு பட்ஜெட், வருங்கால வருமானம் மற்றும் செலவு, குடும்பம் வளரும் போது ஏற்படும்போதும் ஆகும் செலவு போன்றவற்றுக்கு ஏற்றவாறு திட்டமிடல் வேண்டும். அவசர தேவையின் போது வீடு வாங்க வேண்டிய செலவில் 15 முதல் 20 சதவீதம் வரை அவர் தயாராக வைத்து இருக்க வேண்டும். இந்த முன்பணத்தைத் தான் ஏற்கனவே சேமித்து வைத்துள்ள பணம் மற்றும் முதலீடுகள் மூலம் தாயார் செய்துகொள்ள வேண்டும்.
நீண்ட காலம் முதலீடு
சாப்பிடுவதற்கு மற்றும் சொத்துக்களை நிர்மாணிப்பதற்கு ஆகும் செலவினங்களை சமாளிப்பதற்கு ஏற்றவாரு தனது அர்ப்பணிப்பை மாற்ற வேண்டும். நீண்ட காலம் முதலீடு செய்து அவர் வங்கும் சொத்து என்பதால் இவர் செய்யும் கூடுதல் செலவுகள் தேவையற்ற அழுத்தத்தை இவருக்கு ஏற்படுத்தும்.
பட்ஜெட் மற்றும் கடன் திட்டம்
தனது பட்ஜெட் எவ்வளவு என்று மகேஷ் முடிவு செய்த பிறகு அதற்கு ஏற்றவாறு ஒரு கடன் முறையினை தேர்வு செய்ய வேண்டும். நிதி சிக்கல் ஏற்படாத வகையிலும் அதனால் வீட்டை இலக்க நேரிடாத வகையிலும் பொருத்தமான கடனைத் தேர்வு செய்ய வேண்டும்.
ஈஎம்ஐ
இவருக்கு ஏற்றத் தவணை முறையினை தேர்வு செய்ய வேண்டும். இவரது வருமானம் அதிகரிக்கும் போது அதற்கு ஏற்றவாறு தவணையினை கூடுதலாகச் செலுத்துவது போன்று மாற்றி அமைத்துக்கொள்ளக் கடன் திட்டங்கள் வழிவகுக்கும்.
முதலீடு
இதேப்போன்று, தனக்கு பணம் தேவைப்படும் போது பணத்தினை எளிதாக உடனடியாக எடுக்கக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்து வந்தால் நல்லது. இவற்றை எல்லாம் செய்யும் போது மகேஷ் தனது நீண்ட கால கனவான வீட்டை வாங்கத் தயார் ஆகிவிட்டார் என்று கூறலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications