சென்னை: பணமதிப்பிழப்பு, RERA மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவற்றுக்குப் பிறகு ரியல் எஸ்டேட் துறை இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது என நம்பப்படும் சூழ்நிலையில், அவை அனைத்தும் பொய் எனக் கூறும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
இந்திய ரியல் எஸ்டேட் துறையில் வீட்டுக் கட்டுமானம் மற்றும் அதன் விற்பனை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. ஆகையால் வணிக வங்கிகளில் அளிக்கப்படும் வீட்டுக்கடன்களை வைத்தே இத்துறையின் வளர்ச்சியைக் கணித்திடுவிட முடியம்.
ரிசர்வ் வங்கி
இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்களில், நடப்பு நிதியாண்டில் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் வணிக அளிக்கப்பட்ட வீட்டுக்கடன் அளவில் வெறும் 0.4 சதவீதம் அளவிலான வளர்ச்சி மட்டுமே அடைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 4.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 2012
கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில், 2017ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெறும் 10.5 சதவீதம் மட்டுமே வீட்டு கடன் பிரிவு வளர்ச்சி அடைந்துள்ளது. இது 2012 ஆகஸ்ட் மாதத்தின் அளவீட்டுக்கு நிகரானவை. அதாவது தற்போது ரியல் எஸ்டேட் துறை சுமார் 5 வருடம் பின்னடைவை சந்தித்துள்ளது.
பாதிப்பு
பணமதிப்பிழப்பு, RERA அமலாக்கத்தில் தெளிவற்ற நிலை, ஆகியவை இந்திய ரியல் எஸ்டேட் சந்தையில் புதிய வீடுகளின் எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ளது.
இதன் வாயிலாக வீட்டு கடன் கொடுக்கப்படும் எண்ணிக்கையும் அதிகளவில் குறைந்துள்ளது.
மலிவான வீடுகள்
இக்காலகட்டத்தில் மலிவான வீடுகளுக்கு அளிக்கப்பட்ட கடன் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தாலும் மொத்த ரியல் எஸ்டேட் சந்தையில் இதன் தாக்கமும், பங்கும் மிகவும் குறைவு.
மலிவான வீடுகளுக்கு அளிக்கப்படும் கடனின் அளவு 20 லட்சம் ரூபாய் மட்டுமே.
வேலைவாய்ப்பு
இந்தச் சரிவிற்கு வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும் முக்கியக் காரணமாக உள்ளது. ஐடி மற்றும் நிதியியல் துறையில் வர்த்தகம் மந்தமடைந்துள்ள காரணத்தால் புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை குறைந்தது மட்டும் அல்லாலமல், தத்தம் துறைகளில் பணிநீக்கத்தின் எண்ணிக்கையும் சற்று அதிகமாகவே இருந்தது.
ரியல் எஸ்டேட்
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்களின் மூலம் ரியல் எஸ்டேட் துறை இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது என்பது எல்லாம் மாயை.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications