நாட்டின் முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனமான எஸ்பிஐ லைப் சுமார் 8,400 கோடி ரூபாய் முதலீடு மதிப்புடன் புதன்கிழமை மும்பை பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிடுகிறது.
இந்திய பங்குச்சந்தையில் இத்தகைய பெரும் தொகையுடன் நிறுவனங்கள் குதித்தது மிகவும் குறைவு, அதுமட்டும் அல்லாமல் எஸ்பிஐ லைப் பொதுத்துறை நிறுவனம் என்பதால் இந்நிறுவனத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள் என தெரிகிறது.
அட ஒரு பங்கு விலை எவ்வளவு தெரியுமா..?
பங்கு விலை..
நடப்பு நிதியாண்டில் 35-40 சதவீதம் வரையிலான வளர்ச்சியை இலக்காக கொண்டிருக்கும் எஸ்பிஐ லைப் நிறுவனம் பங்குச்சந்தையில் தனது பங்குகளை 685-700 ரூபாய் வரையிலான மதிப்பில் வெளியிட உள்ளது.
கூட்டணி
பிஎன்பி பரிபாஸ் நிறுவனத்தின் இன்சூரன்ஸ் நிறுவனமான கார்டிப் நிறுவனத்துடன் எஸ்பிஐ கூட்டணி வைத்து உருவாக்கிய நிறுவனம் தான் எஸ்பிஐ லைப்.
எஸ்பிஐ லைப்-இன் ஐபிஓ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்நிறுவன ஊழியர்களுக்கு கார்டிப் நிறுவனம் சுமார் 68 ரூபாய் தள்ளுபடியில் பங்குகளை வழக்க முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக ஜியோகஜிட் நிறுவன பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் 99 ரூபாயில் இருந்து 121 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
எஸ்பிஐ லைப்
சமீபத்தில் ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் நிறுவனம் ஐபிஓ வெளியிட்டது, இதன் விலையை விடவும் எஸ்பிஐ லைப்-இன் அதிகப்பட்ச விலையான 700 ரூபாய் சற்று அதிகமாக உள்ளது.
ஆனால் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை அடிப்படையில் எஸ்பிஐ லைப் வென்றுவிடும், காரணம் எஸ்பிஐ லைப் பொதுத்துறை நிறுவனமாகும்.
வர்த்தகம்
எஸ்பிஐ லைப் நிறுவனத்தின் இன்சூரன்ஸ் சேவைகள் சுமார் 24,000 வங்கி கிளைகளிலும், 8,500 பிற வங்கி கிளைகளிலும் வழங்கப்படுகிறது. இதேபோல் இப்பிரிவில் இருக்கும் தனியார் நிறுவனங்களை ஒப்பிடுகையில் புதி வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் ப்ரீமியத்தின் தொகை எஸ்பிஐ லைப் நிறுவனத்தில் 42.8 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
தனியார் நிறுவனங்களில் இதன் அளவு 22.9 சதவீதமாக மட்டுமே உள்ளது.
வாய்ப்பு..
8,400 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய முதலீட்டு இலக்குடன் இறங்கும் எஸ்பிஐ லைப் நிறுவனத்திற்கு முதலீட்டாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதன்கிழமை..
ஐபிஓவிற்காக புதன்கிழமை அதாவது நாளை திறக்கப்படுகிறது. பங்குச்சந்தையில் முதலீடு செய்வோர் எஸ்பிஐ லைப் நிறுவனத்தில் முதலீடு செய்தால் நிச்சயம் லாபம் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications