ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சேமிப்பு கணக்கு மீதான குறைந்தபட்ச இருப்புத் தொகை மீதான அபராத தொகை விதிப்பின் மீது வாடிக்கையாளர்களிடம் பெற்ற கருத்துகள் பெற்றதை வைத்து அவற்றை மறுசீரமைப்புச் செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ 5 வருடங்களுக்குப் பிறகு சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை வைக்காத வாடிக்கையாளர்கள் மீது மீண்டும் அபராதம் விதிக்க இருப்பதாக அறிவித்து நடைமுறைப்படுத்தியது.
தற்போது அந்த அபராத தொகை விதிப்பதின் மீது வாடிக்கையாளர்கள் அளித்த கருத்துகளின் பேரில் அதனை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வங்கியின் வருவதாக நிர்வாக ரஜ்னிஷ் குமார் தெரிவித்தார்.
மறுசீரமைக்கப்பட்ட அபராதம்
எஸ்பிஐ வங்கி சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்காத வாடிக்கையாளர்களின் கணக்கில் அதிகபட்சம் 100 ரூபாய் உடன் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை மறுசீரமைக்கப்பட்ட அபராத தொகையாக விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெருநகரச் சேமிப்புக் கணக்குகள்
பெருநகரங்களில் 5,000 ரூபாய் வரை குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்காத சேமிப்புக் கணக்குகளில் 75 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் போது 100 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதமாக வசூலிக்கப்படும். இதுவே 50 சதவீதத்திற்உ குறைவாக இருப்புத் தொகையினை வைத்து இருக்கும் போது 50 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதமாக வசூலிக்கப்படும்.
கிராபப்புற கணக்குகள்
எஸ்பிஐ வங்கியின் கிராமப்புற கிளைகளில் சேமிப்புக் கணக்கை வைத்துள்ளவர்கள் குறைந்தபட்வ்வ இருப்புத் தொகை 1000 ரூபாய் என்றும் அதனை நிர்வகிக்காத போது 20 ரூபாய் + ஜிஎஸ்டி முதல் 50 ரூபாய் + ஜிஎஸ்டி வரை அபராத தொகை விதிக்கப்படும்.
சேமிப்புக் கணக்குகள் எண்ணிக்கை
எஸ்பிஐ வங்கியில் மொத்தமாக 40 கோடி சேமிப்புக் கணக்குகள் உள்ளதாகவும் அதில் 13 கோடிக் கணக்குகள் அடிப்படை சேமிப்பு கணக்குகளாகவும், பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட சேமிப்புக் கணக்குகள் என்றும் குமார் தெரிவித்தார்.
குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவை இல்லாத சேமிப்புக் கணக்குகள்
எஸ்பிஐ வங்கியில் அடிப்படை சேமிப்புக் கணக்குகள், ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட சேமிப்புக் கணக்குகள் போன்றவற்றுக்குக் குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை.
அபராதம் பெற்ற கணக்குகள்
மிச்சம் இருக்கும் 27 கோடி சேமிப்புக் கணக்குகளில் 15 முதல் 20 சதவீத சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை என்று அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்புகள்
இதுப்போன்று குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்காத வங்கி கணக்குகளின் பயனர்களுக்கு எஸ்பிஐ வங்கி நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
வசூலிக்கப்பட்ட அபராதம்
மே மாதம் மட்டும் குறைந்தபட்ச இருப்புத் தொகை நிர்வகிக்காத வங்கி கணக்குகளில் இருந்து 235 கோடி ரூபாயினை எஸ்பிஐ வங்கி ஜூன் மாதம் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சாதாரணச் சேமிப்புக் கணக்குகள்
சாதாரணச் சேமிப்புக் கணக்கை நிர்வகிக்கும் வாடிக்கையாளர்களால் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்க முடியவில்லை என்றால் அடிப்படை சேமிப்பு கணக்காக மாற்றி அபராதத்தினைத் தவிர்ப்பதற்கான சேவையினையும் எஸ்பிஐ வழங்குகின்றது.


Click it and Unblock the Notifications