இளைய தலைமுறையினர்களை அதிகம் கவர்ந்த சிசிடி எனப்படும் கஃபே காபி டே நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் நிறுவனரான வி.ஜி.சித்தார்த்தா-வின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
இன்று காலையில் சித்தார்த்தா-வின் மும்பை, பெங்களுரூ, சென்னை மற்றும் அவரது சொந்த ஊர் சிக்மங்களுரில் இருக்கும் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனையைச் செய்துவருகின்றனர்.
20 இடங்கள்
வருமான வரித்துறை அதிகாரிகள் அடங்கிய அணிகள் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில், அதாவது வீடுகள், கஃபே காபி டே மற்றும் வே2வெல்த் அலுவலகங்கள் ஆகியவற்றிலும் சோதனைகள் நடந்து வருகிறது.
முதல் தலைமுறை தொழிலதிபர்..
சித்தார்த்தா ஒரு முதல் தலைமுறை தொழிலதிபர் ஆவார், இவருக்குக் கஃபே காபி டே என்னும் தொடர் காபி ஷாப்கள் மட்டும் அல்லாமல் வே2வெல்த் என்ற மருத்துவச் சோதனை நிறுவனமும் உள்ளது.
இதனுடன் பலதரப்பட்ட முதலீடுகள் செய்துள்ளார்.
எஸ்.எம் கிருஷ்ணா
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் யுபிஏ அரசின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான எஸ்.எம் கிருஷ்ணாவின் மருமகன் தான் சித்தார்த்தா.
10 வருடங்களுக்கும் அதிகமாகக் காங்கிரஸ் கட்சியில் இருந்த கிருஷ்ணா, அமித் ஷா முன்னிலையில் பிஜேபி கட்சியில் சேர்ந்தார்.
பங்குகள் சரிவு..
வருமான வரித்துறையின் இந்தச் சோதனையால், மும்பை பங்குச்சந்தையில் கஃபே காபி டே நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 4 சதவீதம் வரை சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications