இந்தியாவிற்கும், இந்தியர்களுக்கும் வைக்கப்பட்டுள்ள 'டைம்பாம்'.. எப்போது வெடிக்கும்..?

ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் பென்ஷன் டைம்பாம் வைக்கப்பட்டு உள்ளதாகத் தருண் ராமதுரை கூறியுள்ளார்.

பொதுவாக இன்றைய தலைமுறையினர் மாத சம்பளம் தரும் வேலைக்கே அதிகளவில் செல்கின்றனர். இப்படி இருக்குபோது, இதில் மிகவும் குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே ரிட்டையர்மென்ட்-க்கான சேமிப்பைச் செய்து வருகின்றனர். இது மிகப்பெரிய பிரச்சனையாகத் தருண் கூறுகிறார்.

சேமிப்பு

சேமிப்பு

இன்றைய தலைமுறையினர் மத்தியில் சேமிப்பு செய்யும் அளவுகள் மிகவும் அளவுகள் மிகவும் குறைவாகவே உள்ளது, அதிலும் சிலர் சேமிப்பு என்பதே இல்லாமல் உள்ளனர் இது நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் பாதிப்பு ஏற்படக்கூடியவை.

ஆகையால் நாடும், நாட்டின் பொருளாதாரமும், சிறப்பான நிலையில் இருக்கும்போதே இந்தப் பிரச்சனையைச் சரி செய்து விட வேண்டும் எனத் தருண் தெரிவித்துள்ளார்.

 

இந்திய பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம்

அடுத்த 20 வருடத்தில் இந்தியா 2 டிரில்லியன் பொருளாதாரமாக மாறும், குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் அடுத்த 5 வருடத்தில் ஜெர்மனி நாட்டைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா உலகின் 4வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருமாறும் என் ஐஎம்எப் கூறியுள்ளது.

மேலும் அடுத்த 20 வருடத்தில் இந்தியாவின் பொருளாதாரம் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 2 சதவீதம் அளவிற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 கெட்ட செய்தி

கெட்ட செய்தி

உலக நாடுகளிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட இந்தியாவில் வேலைக்குச் செல்லுவோர் மத்தியில் வெறும் 7.4 சதவீதம் மட்டுமே ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்துள்ளனர்.

இதே அளவீடு ஜெர்மனி நாட்டில் 65 சதவீதமாகவும்,பிரேசில் நாட்டில் 31 சதவீதமாகவும் உள்ளது.

 

காரணம்

காரணம்

இந்திய இளைஞர்கள் மத்தியில் வெறும் 7.4 சதவீத மக்களுக்கு மட்டுமே ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்துள்ளதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. இந்தியாவில் வகைப்படுத்தாத துறை மிகவும் அதிகம் என்பதால் இத்துறைக்கு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாகக் கொண்டு சேர்க்க முடியவில்லை.

இதேபோல் இந்தியாவில் அனைத்துத் தரப்பினருக்கும் ஏதுவான திட்டங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை.

 

ஆய்வு

ஆய்வு

தருண் ராமதுரை செய்த ஆய்வில் இந்தியாவில் 50 சதவீத வீடுகள், பிள்ளைகளை நம்பியும், தங்களிடம் இருக்கும் சிறு சேமிப்பு வைத்து மட்டுமே நகர்கிறது. இதேபோல் 10 சதவீத வீடுகள் அரசு ஒய்வூதியத்தன் மூலம் இயங்குகிறது எனத் தெரிவித்துள்ளார்.

 பாதுகாப்பு

பாதுகாப்பு

இந்தச் சூழ்நிலை தொடர்ந்தால் வயதான காலத்தில் மக்களுக்குப் பாதுகாப்பின்மை அதிகரிக்கும் இதனால் நாட்டிற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் அதிகளவிலான பாதிப்புகளும் ஏற்படும்.

இந்தியா

இந்தியா

வெளிநாடுகளில் பெற்றோர்கள் பிள்ளைகளையும், பிள்ளைகள் பெற்றோர்களையும் நம்பியிருக்காத நிலை உள்ளதால் அங்கு அதிகளவிலான ஓய்வூதிய திட்டங்கள் தேவைப்படுகிறது. இந்தியாவில் பெற்றோர்கள் பிள்ளைகளும் எப்போது சேர்ந்திருப்பதால் இத்தகைய திட்டங்களின் அவசியம் இல்லாலமல் போகிறது.

ஆனால் இந்தியா அனைத்து விடயங்களிலும் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளைப் பின்பற்றி வருவது போல் இதிலும் பின்பற்றினால், ஓய்வூதிய திட்டங்கள் இந்தியாவில் மிகவும் அவசியமானதாக மாறும்.

இத்தகைய சூழ்நிலையை டைம்பாம் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது.

 

தருண் ராமதுரை

தருண் ராமதுரை

இவர் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பிற நிதி துறை கட்டுப்பாட்டு ஆணையத்துடன் இணைந்து வெளியிட்ட ஹவுஸ்ஹோல்டு பைனான்சஸ் என்னும் அறிக்கையை எழுதியவர்.

தற்போது இவர் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் நிதியியல் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியராக உள்ளார்.

 

எஸ்பிஐ

எஸ்பிஐ

விஸ்டாடோம் ரயில் பெட்டி

விஸ்டாடோம் ரயில் பெட்டி

வேலையில்லா திண்டாட்டம்..!

வேலையில்லா திண்டாட்டம்..!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+