இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் வேலைவாய்ப்பு சந்தையின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களின் நிலை மேலும் மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவிற்கு, வேலைவாய்ப்பு சந்தைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறைவான அளவிலேயே உள்ளது.
இது இந்திய பொருளாதார வளர்ச்சியை மேலும் பாதிக்கும் முக்கியக் காரணியாக அமைந்துள்ளது.
வகைப்படுத்தப்பட்ட துறை
2012ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் வகைப்படுத்தப்பட்ட துறையில் 4.68 கோடி பேர் பணியாற்றியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது ஒவ்வொரு வருடமும் வெறும் 2-3 லட்ச வேலைவாய்ப்புகளை இந்திய சந்தையில் உருவாக்கப்படும் நிலையில், 1.2-1.3 கோடி பேர் புதிதாக வேலைவாய்ப்பு சந்தைக்குள்ள நுழைந்து வருகின்றனர். மீதமுள்ள 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்க முடியாத சூழ்நிலையில் நிலவுகிறது.
ஜிடிபி
இந்த வேலைவாய்ப்பு பற்றாக்குறையால் ஜூன் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2 சதவீதம் குறைந்து 5.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் இதன் அளவீடு 7.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் பாதிப்பு
நாட்டின் உள்நாட்டு அளவான ஜிடிபி குறைந்தால், வேலைவாய்ப்பு சந்தை மேலும் பாதிக்கப்படும்.
சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், புதிய வேலைவாய்ப்பு உயர்ந்தால் ஜிடிபி உயரும், ஜிடிபி உயர்ந்தால் புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை உயரும்.
10 லட்சம் வேலைவாய்ப்புகள்
நாட்டின் ஜிடிபி ஒரு சதவீதம் உயர்ந்தாலே இந்தியாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.
முக்கியப் பிரச்சனை
இந்தியாவில் 15-20 வருடங்களாக ஐடி மற்றும் பிபிஓ துறை நிறுவனங்கள் அதிகளவிலான வேலைாய்ப்புகளை அளித்து வந்தது. ஆனால் தற்போது இத்துறையில் ஏற்பட்ட பிரச்சனைகள் மூலம் இத்துறையில் புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ளது.
மேலும் இத்துறையில் இருக்கும் உயர் அதிகாரிகளையும் ஐடி நிறுவனங்கள் வெளியேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
50 லட்ச வேலைவாய்ப்பு
ஒவ்வொரு வருடமும் 1.3 கோடி பேர் வேலைவாய்ப்பு சந்தைக்கு வரும் நிலையில், வகைப்படுத்தப்பட்ட மற்றும் வகைப்படுத்தப்படாத துறை ஆகிய இரண்டிலும் வெறும் 50 லட்ச வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்படுகிறது.
இதனால் 80 லட்சம் பேர் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.
வேலையில்லா திண்டாட்டம்..
இந்த நிலை தொடர்ந்தால் நாட்டின் பொருளாதாரத்துடன், வேலைவாய்ப்பு சந்தையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications