இந்திய பொருளாதாரம் குறைந்தாலும், மோடியின் சொத்து மட்டும் 42% வளர்ச்சி..!
டெல்லி: ஒவ்வொரு வருடமும் மத்திய அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து மதிப்பு எவ்வளவு என்ற விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அப்படிச் சொத்து விவரங்களைச் சமர்ப்பிப்பதற்கான இந்த அண்டிற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 31 ஆகும்.
எனவே பிரதமர் மோடி உட்பட 15 அமைச்சர்கள் மட்டும் இதுவரை தங்களது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்துள்ளனர். அதில் நரேந்திர மோடி அவர்கள் 2017 மார்ச் 21 வரை தனக்கு இருந்து சொத்து விவரங்கள் எவ்வளவு என்பதில் தனது அசையும் சொத்து மதிப்பு 1,00,13403 ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி தாறுமாற குறைந்த நிலையில் மோடியின் சொத்து மட்டும் கடந்த 2 வருடத்தில் 42% வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிஸையில் மோடியின் அசையும், அசையா சொத்துக்களின் விபரம் உங்களுக்காக.
ரொக்க பணம்
2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் ஆம் தேதி கணக்கின் படி தன்னிடம் 1,49,700 ரூபாய் ரொக்க பணம் இருந்ததாகத் தாக்கல் செய்துள்ளார்.
வங்கி சேமிப்பு கணக்கு
எஸ்பிஐ வங்கியின் காந்தி நகர் கிளையில் 1,33,496 ரூபாயினை இருப்புத் தொகையாக வைத்துள்ளார்.
பிக்சட் டெபாசிட்
அதே எஸ்பிஐ வங்கி கிளையில் 90,26,148 ரூபாயினைப் பிக்சட் டெபாசிட் மற்றும் பிற சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து வைத்துள்ளார்.
பாண்டு பத்திரங்கள்
எல்&டி இன்ப்ராஸ்டர்க்ச்சர் பாண்டு பத்திரத்தில் 2012-ம் ஆண்டு 20,000 ரூபாயினை முதலீடு செய்துள்ளார்.
தேசிய சேமிப்பு பத்திர திட்டம்
தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் ஆம் தேதி கணக்கின் படி 3,96,505 ரூபாய் இவரது பெயரில் உள்ளது.
லைப் இன்சூரன்ஸ்
லைப் இன்சூரன்ஸ் திட்டத்தில் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் ஆம் தேதி கணக்கின் படி 1,59,281 ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.
கடன்
இவரது பெயரில் கடன் ஏதும் இல்லை.
வாகனங்கள்
இவரது பெயரில் எந்த வாகனங்களும் பதிவு செய்யப்படவில்லை.
தங்கம்
4 தங்க மோதிரங்கள் அவற்றின் அளவு சராசரியாக 45 கிராம் என்றும் அதன் தற்போதைய மதிப்பு 1,28,273 ரூபாய் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மொத்த மதிப்பு
மேலே கூறிய அனைத்து முதலீடு மற்றும் சொத்து போன்றவற்றைக் கணக்கிட்டால் சராசரியாக 1,00,13,403 ரூபாய் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த அசையா சொத்துக்கள் எவ்வளவு என்று பார்க்கலாம்.
வீடு
காந்திநகரில் இவரது பெயரில் உள்ள வீட்டின் மொத்த அளவு 3531.45 சதர அடி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த இடத்தினை இவர் 2002-ம் ஆண்டு 1,30,488 ரூபாய் கொடுத்து வாங்கியதாகவும் அதில் 2,47,208 ரூபாய் செலவு செய்து கட்டுமான பணிகள் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவற்றின் மதிப்புச் சராசரியாகத் தற்போதைய மதிப்பு 1,00,00,00 ரூபாய் போகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முழு ஆவணம்
பிரதமர் அலுவலக இணையதளத்தில் இதற்கான ஆவணமும் வெளியிடப்பட்டுள்ளது. அதனை இங்கே காணலாம்.
எந்த பிரச்சனையும் இல்லை
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications