அடுத்த 30 வருடத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை.. ஐடி ஊழியர்களுக்கு நற்செய்தி..!

இந்தியாவில் ஊழியர்களின் சம்பளம் வல்லரசு நாடுகளுக்கு இணையாக உயராமல் இருக்கும் வரையில் ஐடி துறையில் வேலைவாய்ப்புக்களுக்குப் பஞ்சம் இல்லை என ஐடி கன்சல்டன்சி நிறுவனமான எவரஸ்ட் குரூப் தெரிவித்துள்ளது.

ஆனால் வெளிநாடுகளுக்குச் சென்ற வேலைவாய்ப்புகள் இனி இந்தியாவிற்கு எப்போதும் திரும்பாது எனத் தெரிவித்துள்ளதையும் ஐடி ஊழியர்கள் கவனிக்க வேண்டும்.

இந்தியாவும்.. பன்னாட்டு நிறுவனங்களும்..

இந்தியாவும்.. பன்னாட்டு நிறுவனங்களும்..

ஐடி மற்றும் பிற துறையின் பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவை அதிகளவில் நாடி வருவதற்கான முக்கியக் காரணம் இரண்டு.

ஒன்று இந்திய மக்கள் மத்தியில் இருக்கும் படிப்பறிவு மற்றும் திறன். இரண்டாவது மலிவான சம்பளத்தில் ஊழியர்கள் கிடைக்கும் நிலை. இதுவே பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் முக்கியக் காரணியாக உள்ளது.

 

 2000ஆம் ஆண்டின் கணிப்புகள்..

2000ஆம் ஆண்டின் கணிப்புகள்..

இந்தியாவில் ஊழியர்களின் சம்பளம் வல்லரசு நாடுகளுக்கு இணையாக உயராமல் இருக்கும் வரை இந்தியாவிற்குப் பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து வேலைவாய்ப்புகளை அளிக்கும்.

அதுவே சம்பளத்தை உயர்த்திவிட்டால் வேலைவாய்ப்புகள் அனைத்தும் தன்நாட்டிற்கே கொடுத்துவிடும்.

இத்தகைய சூழ்நிலை 2020ஆம் ஆண்டில் வரும் என 2000ஆம் ஆண்டுக் கணிக்கப்பட்டது ஆனால், தற்போது நிலை வேறு.

 

எவரஸ்ட் குரூப்

எவரஸ்ட் குரூப்

இந்தியா இப்போதும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு முக்கிய ஈர்ப்பாக உள்ளது மட்டுமல்லாமல், குறைவான சம்பளத்தில் ஊழியர்களைப் பெற்ற முடியும் அளவிலும் உள்ளது.

30 வருடங்களுக்குப் பிரச்சனையில்லை

30 வருடங்களுக்குப் பிரச்சனையில்லை

15 வருடங்களுக்கு முன்பு பன்னாட்டு நிறுவனங்கள் கொடுப்பட்டு வந்த வாய்ப்புகள் எண்ணிக்கை போல் தற்போது இல்லையென்றாலும், அடுத்த 30 வருடங்களுக்கு இதே சூழ்நிலை நிலவும் என எவரஸ்ட் குரூப்-இன் தலைமை ஆராய்ச்சியாளர் மைகெல் ஜேன்சென் தெரிவித்துள்ளார்.

 ஐடி நிறுவனங்கள்

ஐடி நிறுவனங்கள்

இந்திய ஐடி நிறுவனங்கள் தற்போது ஊழியர்கள் அடிப்படையிலான வர்த்தக முறையை முழுமையாக மாற்றி அமைத்திருத்தலும், வெளிநாடுகளில் அதிகளவிலான வேவைவாய்ப்புகளை உருவாக்கியிருந்தாலும் 2040-50 ஆண்டு விரையில் தொடர்ந்து அதிகளவிலான வேலைவாய்ப்புகளை அளித்துக்கொண்டே இருக்கும்.

 திரும்பி வராது..

திரும்பி வராது..

அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் விசா கட்டுப்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் இந்திய ஐடி நிறுவனங்கள் தத்தம் நாடுகளில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

தொடர்ந்து குறையும்..

தொடர்ந்து குறையும்..

இந்த வேலைவாய்ப்புகள் இனி இந்தியாவிற்க வராது அதனால் ஐடி நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் அளித்து வரும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை இனி வரும் காலத்தில் கணிசமாகக் குறைந்துகொண்டே வரும்.

சம்பளம்

சம்பளம்

பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து இந்தியாவிற்கு வேலைவாய்ப்புகளை அளிப்பதற்கு முக்கியக் காரணம் குறைவான சம்பளமே.

15 வருடங்களுக்குப் பெங்களூரில் இருக்கும் ஐடி ஊழியர்களின் சம்பளம் அமெரிக்காவின் டல்லாஸ் நகருக்கு இணையான சம்பளமாக உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று வரை ஐடி ஊழியர்களின் ஆரம்பகட்ட சம்பளத்தின் அளவு 25,000 ரூபாயாகவே உள்ளது.

ஆரம்பச் சம்பள அளவீட்டை உயர்த்தாமல் இந்திய ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து பல வருடமாக ஏமாற்றி வருகிறது குறிப்பிடத்தக்கது.

 

10 லட்சம் இன்ஜினியர்கள்

10 லட்சம் இன்ஜினியர்கள்

இந்திய வேலைவாய்ப்பு சந்தைக்கு ஒவ்வொரு வருடமும் சுமார் 10 லட்சம் இன்ஜினியர்கள் வருகின்றனர். இதில் 40-60 சதவீதம் வரையிலான இன்ஜினியர்கள் தொழில்நுட்பம் அல்லது ஐடி நிறுவன பணிகளில் சேர்கின்றனர்.

திறன் குறைபாடு..

திறன் குறைபாடு..

இதுநாள் வரையில் எந்தத் திறன் தேவையும் இல்லாமல் ஐடி நிறுவனங்களில் சேர்க்கப்பட்ட இன்ஜினியர்கள் நிலை மாறும். காரணம் தற்போது ஐடி நிறுவனங்களும், அவை பணியாற்றும் தொழில்நுட்பமும் மிகப்பெரிய அளவில் மாற்றமடைந்துள்ளது.

ஆகவே இனிவரும் காலங்களில் ஐடி நிறுவனங்களில் சேர வரும்பு பட்டதாரிகள் கண்டிப்பாக ஏதேனும் ஒரு தொழில்நுட்பத்தை முழுமையாகக் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.

 

ஆட்டோமேஷன்

ஆட்டோமேஷன்

தற்போது செய்து வரும் பணிகள் அனைத்தும் ஐடி நிறுவனங்கள் ஆட்டோமேஷன் செய்து வரும் காரணத்தால், ஊழியர்களின் தேவை அதிகளவில் குறைந்துள்ளது.

இதன் காரணமாகவே புதிய தொழில்நுட்பத்தில் புதிய வர்த்தகத்தைத் தேட இந்திய ஐடி நிறுவனங்கள் படையெடுத்துள்ளது.

 

வேலையில்லா திண்டாட்டம்..

வேலையில்லா திண்டாட்டம்..

சூப்பரான டிப்ஸ்..!

சூப்பரான டிப்ஸ்..!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+